Wednesday 18 May 2011

ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவம்



ஜமாஅத்தில் கலந்து கொள்ளாது தன் வீட்டில் தொழுபவரைப்போல நீங்களும் உங்கள் வீடுகளில் தொழுவீர்களானால் உங்கள் நபியின் வழிமுறையை கைவிட்டவர்களாவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் கை விட்டீர்களானால் நிச்சயம் நீங்கள் வழிதவறிப் போவீர்கள். எவர் ஒளூச் செய்து-அதை நல்ல முறையில் செய்து இப்பள்ளிகளில் ஏதேனும் ஒன்றை நாடி வருகிறாரோ அல்லாஹ் அவருக்கு – அவர் எடுத்து வைக்கம் ஒவ்வொரு எட்டுக்கும் பதிலாக ஒரு நன்மையை எழுதிஒரு பதவியை உயர்த்துகிறான். மேலும் ஒரு தீமையை அவரை விட்டும் அகற்றுகிறான். எங்களிடையே நான் பார்த்திருக்கின்றேன் பகிரங்கமான சந்தர்ப்பவாதியைத் தவிர வேறெவரும் ஜமாஅத்துக்கு வராமல் இருக்கமாட்டார். திண்ணமாக இயலாதவரைக்கூட இரண்டுபேர் கைத்தாங்கலாக அழைத்து வந்து வரிசையில் நிறுத்தப்படும் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்-முஸ்லிம்.

ஜமாஅத் தொழுகையின் சிறப்பு
ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது தன்னுடைய வீட்டில் தொழுவதை விடவும்கடைவீதியில் தொழுவதை விடவும் 25 மடங்கு அல்லது அதைவிட அதிகம் சிறந்ததாகும். ஒருவர் அழகிய முறையில் உளூச் செய்து தொழுகைக்காகவே பள்ளியை நோக்கிச் செல்வாரானால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பதவி உயர்த்தப்பட்டு ஒரு பாவம் மன்னிக்கப்படுகின்றது.
அவர் தொழுது முடித்துவிட்டு அவ்விடத்திலேயே இருக்கும்வரை வானவர்கள்இறைவா! இவருக்கு நீ அருள் புரிவாயாக! என்று பிராத்தித்துக் கொண்டேயிருப்பார்கள். உங்களில் ஒருவர் (ஜமாஅத்) தொழுகையை எதிர்பார்த்து (தொழும் இடத்திலேயே இருந்து) கொண்டிருப்பவர் தொழுகையிலேயே இருப்பார் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரி 647, முஸ்லிம்.
பள்ளிக்கு வரும் முறை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள். அப்போது அமைதியான முறையிலும் கண்ண்pயமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்கு கிடைத்த ரக்அத்துகளை (ஜமாஅத்துடன்) தொழுங்கள்உங்களுக்குத் தவறிப்போனதைப் பூர்த்தி செய்யுங்கள் - நூல்:புகாரி636, முஸ்லிம்திர்மிதி 326.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம் அப்போது சிலர் வேகமாக வரும் சப்தத்தை அவர்கள் செவியுற்றனர்தொழுகையை முடித்ததும் உங்களுக்கு என்ன நேர்ந்தது, (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்) என்று கேட்டார்கள்,அதற்குத்தோழர்கள்நாங்கள் தொழுகைக்காக விரைந்து வந்தோம் என்றனர். அவ்வாறு செய்யாதீர்கள்தொழுகைக்கு வரும்போது அமைதியாக வாருங்கள்! உங்களுக்குக் கிடைத்ததைத் தொழுது கொள்ளுங்கள்தவறியதை நிறைவு செய்து கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் – அபூகதாதா (ரலி) நூல் - புகாரி 635, முஸ்லிம்.
தொழுகைக்கு முற்கூட்டியே வந்து காத்திருப்பதன் சிறப்பு
ஒருவர் தம்முடைய வீட்டில் அல்லது கடைவீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது 25 மடங்கு சிறந்ததாகும். அதாவது ஒருவர் உளூச்செய்துஅதை அழகாகவும் செய்து தொழுகைக்காகவே பள்ளிவாசலுக்குச் செல்வாராயின் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பதவி உயர்த்தப்பட்டு ஒரு பாவம் அழிக்கப்படுகின்றது. அவர் தொழுது முடித்து விட்டு தொழுமிடத்திலேயே இருக்கும் வரை வானவர்கள்இறைவா இவருக்கு நீ அருள் புரிவாயாக என்று பிரார்த்திக் கொண்டேயிருப்பார்கள். உங்களில் ஒருவர் (ஜமாஅத்து) தொழுகையை எதிர்பார்த்து (தொழுமிடத்தில்) இருக்கும்போதெல்லாம் தொழுகையிலேயே இருக்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர் – அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 647,முஸ்லிம்.

பாங்கு சொல்வதிலும் தொழுகையின் முதல் பரிசையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்காகப் போட்டிப்போட்டுக் கொண்டு முந்தி வருவர். பின்னர் அதன் விளைவாக அவர்களிடையில் சீட்டுக் குலுக்கி எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர். மேலும் தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் அதற்காக முந்திச் செல்வர். சுபுஹுத் தொழுகையிலும் இஷாத் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவர்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளார்- அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரி615, முஸ்லிம்.

No comments:

Post a Comment