Tuesday, 17 May 2011

விபரம்கெட்டத்தனமான கணக்கும் பாப்புலர் பிராண்டும்.



பழைய படம்

தொகுதிக்கு 2000 ஓட்டுக்கள் என வாங்கி தங்களுடைய அபார பலத்தை நிர்ணயித்த பாப்புலர் பிராண்ட். (நல்ல வேளை மமக அதிமுகவிடம் தஞ்சம் புகுந்ததால் 2000 ஓட்டு கணக்கிலிருந்து தப்பித்துக்கொண்டார்கள்) தங்களுடைய வெற்றி விபரத்தை பின்வருமாறு எழுதியுள்ளார்கள்.

நன்றி! நன்றி!! நன்றி!!!

அல்லாஹ்வின் பேருதவியால் பாளையங்கோட்டை, கடையநல்லூர், பூம்புகார் ஆகிய தொகுதிகளில் SDPI மூன்றவாது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.தொண்டாமுத்தூர், திருப்பூர்-தெற்கு, துறைமுகம் ஆகிய தொகுதிகளில் SDPI நான்காவது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.டோட்டல் ஓட்டு எத்தனை என்பதை சொல்லாமல் மூன்றாம் இடம் நான்காம் இடம் என்ற கதையை கூறியுள்ளார்கள். அப்பா நான் இரண்டு பாடத்தில் வெற்றி பெற்றேன் என்று கூறிய கதையாக உள்ளது.தேர்தலின் துவக்கத்திலேயே குழப்பத்தில் துவங்கிய இந்த கட்சி மொத்தம் வாங்கிய சொச்சம் ஓட்டுகளை கூறாமல் தரவரிசை கூறி தப்பிக்கப் பார்க்கின்றது.தமிழகத்தில் தக்க பாடம் கிடைத்துள்ள நிலையில் கேரளாவுக்குத் தாவிச் சென்று அங்குள்ள புள்ளி விபரத்தை அளித்து மகிழ்சியடைந்துள்ள கதை வினோதம்.

அது குறித்த தலைப்பு (சிரிக்கவேண்டாம்)

கேரளா அரசியலில் SDPI அசைக்க முடியாத சக்தியாக மாறியது!!

http://pfikaraikal.wordpress.com/2011/05/14/%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%b3%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-sdpi-%e0%ae%85%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae/இதில் இவர்கள் போட்ட பட்டியலைப் பாருங்கள்.//வடகரை தொகுதியில் இடதுசாரி கூட்டணியை சார்ந்த சி.கே.நாணு 847 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார். ஆனால், எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஸலீம் அழியூர் பெற்ற வாக்குகளோ 3.488 ஆகும். காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பெற்ற வாக்குகள் தடையாக மாறியது குறிப்பிடத்தக்கது//

எஸ்டிபிஐ கட்சி போட்டியிடாமல் இருந்தால் அவர்களுக்கு வாக்களித்த சொச்சம் நபர்கள் யாரை ஆதரித்திருப்பார்கள் என்று முதலில் தெளிவாக கூறவேண்டும்.

கேரளத்தில் கோலோச்சும் இரண்டு கூட்டணிகளான LDF ஐயா? UDF ஐயா? என்பதை தெளிவுபடுத்திய பின்னர் எங்கள் ஓட்டு இன்னவருக்கு சாதகமானது இன்னவருக்கு பாதகமானது என்று கூறவேண்டும். அதன் முக்கியத்துவம் புரியவில்லையா? தொடர்ந்து வாசிக்கவும்.

வடகரை தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் LDF சார்ந்தவர்.
தோற்றவர் LDF ஐ சார்ந்தவர்

முழு விபரம்:Kerala - VADAKARA

    C.K.NANU Janata Dal (Secular) 46912 (LDF)
    ADV.M.K. PREMNATH SOCIALIST JANTA (DEMOCRATIC) 46065 (UDF)
    N.VENU Independent 10098
    M.P.RAJAN Bharatiya Janata Party 6909
    SAALIM AZHIYUR SOCIAL DEMOCRATIC PARTY OF INDIA 3488

இவர்கள் தனித்து நிற்காமல் UDF ஐ ஆதரித்தால் 49553 வாக்குகள் பெற்று வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பார் என்பது உண்மைதான். ஆனால் தனித்து நிற்காமல் இருந்தால் இவர்களுடைய ஓட்டு க்கு கிடைக்காது என்பதை அடுத்த குறிப்பில் தெரியப்படுத்தி அவமானப்படுவதை காணலாம்.

இவர்களை விட 6610 வாக்குகள் அதிகம் வாங்கிய ஒரு சுயேட்சை வேட்பாளருடைய (10098) ஓட்டு யாருக்கு கிடைத்திருக்குமோ அவர் அமோக வெற்றி பெற்றிருப்பாரே... ?

ஆக இங்கே காங்கிரசுக்கு பாதகமாக அமைந்ததாக பாட்டுப்பாடும் இவர்கள் அடுத்து கூறியதைப் பாருங்கள்.

//முஸ்லிம் லீக் இளைஞர் பிரிவைச்சார்ந்த கே.எம்.ஷாஜி 483 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வெற்றிப்பெற்றார். ஆனால், எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் நவ்ஷாத் பெற்ற வாக்குகளோ 2,935 ஆகும். இத்தொகுதியில் எஸ்.டி.பி.ஐ பெற்ற வாக்குகள் இடதுசாரிகளின் வெற்றியை பாதித்தது.//வாக்கு வித்தியாசம் 493 ஐ 483 என்று எழுதியுள்ளார்கள்.

முழு விபரம்:Kerala - AZHIKODE

    K.M.SHAJI Muslim League Kerala State Committee 55077 (UDF)    M.PRAKASHAN MASTER Communist Party of India (Marxist) 54584 (LDF)    M.K.SASEENDRAN MASTER Bharatiya Janata Party 7540     NOUSHAD PUNNAKKAL Independent 2935

அங்கே UDF தோற்றதற்கு நாங்கள் காரணம் என்று கூறிய இவர்கள் இங்கே LDF தோற்றதற்கும் நாங்கள் காரணம் என்று கூறுவதைப்பார்த்தால் அமெரிக்காவின் புளுகு மூட்டை தேவலாம் போலுள்ளது.ஒரு வாதத்திற்காக இவர்கள் சுயேட்சையாக நிற்கவில்லையென்றால் அழீக்கோடு தொகுதியில் LDF ஐ யும் வடகரா தொகுதியிர் UDF ஐயும் ஆதரித்திருப்பதாக ந்தால் இந்த கூற்று நியாயம் என்று பேசிக்கொள்ளலாம். ஆனால் அவ்வாறில்லை, நாங்கள் இப்படித்தான் என்று மீண்டும் கூறுவதைப் பாருங்கள்.

//திருச்சூர் மாவட்டம் மணலூர் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் பேபி ஜானின் தோல்வியில் நிர்ணாயக பங்குவகித்தது எஸ்.டி.பி.ஐ ஆகும்.483 வாக்குகள் வித்தியாசத்தில் தான் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் வெற்றிப்பெற்றார். எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பி.கே.உஸ்மான் பெற்ற 2,293 வாக்குகள் இத்தொகுதியில் காங்கிரஸின் வெற்றியை நிர்ணயித்துள்ளது.//வாக்கு வித்தியாசம் 481 ஐ 483 என்று தவறுதலாக குறிப்பிட்டுள்ளார்கள்

Kerala - MANALUR

  • P.A. MADHAVAN Indian National Congress 63077  (UDF) BABY JOHN Communist Party of India (Marxist) 62596 (LDF) P.M. GOPINATHAN Bharatiya Janata Party 10543 P.K. USMAN SOCIAL DEMOCRATIC PARTY OF INDIA 2293SURESH TACHAPPILLY Bahujan Samaj Party 594
இந்த தொகுதியிலும் நாங்கள்தான் அவர்கள் என்று புளுகியுள்ள இவர்களிடம் யாராவது "பகுஜன் சமாஜ் பார்ட்டியின்" ஓட்டுக்கள் தோற்றவர்களுக்குச் சென்றால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆக எதையாவது சொன்னால் அதில் கொஞ்சமாவது பொருத்தம் வேண்டும். திருத்தங்களும் அதிகம் தேவை, பொருத்தங்களாக எதுவும் இல்லை என்ற அளவுக்கு இவர்கள் கூறியுள்ளதைப் பார்த்தால் பொய்யன் ரஷாத் கலீஃபாவின் கண்க்கு நினைவுக்கு வருகிறது.

பொய் கலந்து இயக்கம் துவக்கினால் இதுதான் நிலைமை... பாவம் அப்பாவி உறுப்பினர்கள்.

No comments:

Post a Comment