Wednesday, 25 May 2011

B.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு



 B.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு தற்போது பெரும்பாலான மாணவர்களின் விருப்ப படிப்பாக மாறிவருகின்றது. தமிழகத்தில் 12 கல்லூரிகளில் மட்டும்தான் இந்த படிப்பு உள்ளது. அதில் 2 கல்லூரிகள் (சென்னை புது கல்லூரி, கீழகரை சதக் கல்லூரி)முஸ்லீம்களால் நடத்த படுகின்றன.  B.Arch படிப்பில் சேர அண்ணா பல்கலை கழகம் வருட வருடம் கலந்தாய்வு (counseling) நடத்துகின்றது. அதற்க்கான விண்ணப்பம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது, விண்ணப்ப படிவம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் மட்டும்தான் கிடைக்கும். விண்ணப்பத்தை பெறுவதற்க்கு NATA  தேர்வில் தேர்சி பெற்று இருக்க வேண்டும். NATA தேர்வின் முழுவிபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. NATA தேர்வின் மதிப்பெண் சான்றிதழுடன் (Score card) சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்திற்க்கு சென்று விண்ணப்பத்தை பெற வேண்டும். 

B.Arch  கலந்தாய்வு (counseling) முறை :  +2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண்ன்னையும், NATA தேர்வில் எடுத்த மதிப்பெண்ணையும் வைத்து கட் ஆப் மதிப்பெண் கணக்கிட படுகின்றது. அதாவது +2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண்ணை 6 - ஆல் வகுத்துகொள்ள வேண்டும், அதனுடன் NATA தேர்வின் மதிப்பெண்ணை கூட்டினால் வருவதுதான் B.Arch கட் ஆப் மதிப்பெண். இது 400 மதிப்பெண்ணுக்கு இருக்கும்.
உதாரணத்திற்க்கு ஒரு மாணவர் +2 தேர்வில் 1050 மதிப்பெண்னும், NATA தேர்வில் 130 மதிப்பெண்னும் எடுத்து இருந்தால்,  அவரின்  கட் ஆப் மதிப்பெண்  305 ஆகும்.
இந்த கட்  ஆப் மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை பட்டியல் (Rank list) தயாரிக்கப்பட்டு மாணவர்கள் கலந்தாய்விற்க்கு (counseling) அழைக்கப்படுவார்கள். இந்த B.Arch கலந்தாய்வில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது.
NATA  (National Aptitude Test in Architecture)தேர்வு
    இது ஒரு கட்டிட நிர்மான கலை திறன் ஆய்வு தேர்வாகும். இதை எழுதுவதர்க்கு தமிழகத்தில் 15 மையங்கள் உள்ளன. அங்கு சென்று NATA தேர்வு எழுத நாம் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்து ஒருவாரம் அல்லது 10 நாளில் தேர்வு எழுதலாம். தேர்வு கட்டணம் ரூ.800 . தேர்வு எழுதிய ஒரு நாளில் மதிப்பெண் சான்றிதழ் (Score card)வழங்கப்படும்.  இந்த தேற்விற்க்கு தயாராவதற்க்கு புத்தகங்கள் உள்ளன. இந்த தேர்வு எழுதுவதற்க்கு பயிற்சியும் அளிக்கப்படுகின்றது, ஆனால் பயிற்சி கட்டணம் ரூ.6000 முதல் ரூ.8000 வரை இருக்கும்.
NATA தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. ஒன்று Online தேர்வு 100 மதிப்பெண் கொண்டது,  (Chose the best answer type) மற்றொன்று வரைதல் தேர்வு (Drawing Test) 100 மதிப்பெண் கொண்டது.  மொத்தம் 200 மதிப்பெண், இரண்டு தேர்விலும் சேர்த்து குறைந்தது 80 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.  80 -க்கும் குறைவாக மதிபெண் எடுத்தால் மீண்டும் இந்த தேர்வை எழுதலாம். ஆனால் அதிக பட்சமாக 3 முறைக்கு மேல் எழுத முடியாது. அதாவது மூன்று முறை NATA தேர்வு எழுதி 80 மதிப்பெண் எடுக்காவிடால் நடப்பு ஆண்டில் (Current year) B.Arch படிக்க முடியாது. அடுத்த ஆண்டில் தேர்வு எழுதி படிக்கலாம். NATA தேர்வு எழுத  தமிழகதில் உள்ள 15  மையங்கள் மற்றும் NATA தேர்வு  பற்றிய இதர விபரங்கள் இந்த www.nata.in இணையதளத்தில் உள்ளன.
மேலும் விபரங்களுக்கு sithiqu.mtech@gmail.com மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

S.சித்தீக்.M.Tech.
TNTJ Studend Wing.


Monday, 23 May 2011

இஸ்லாமும் இன்றைய கல்லூரிகளும்!!!!




 
பள்ளி படிப்பை முடித்துவிட்டு மேலதிகமாக விரும்பிய துறையில் படிக்கும் இடமே கல்லூரியாகும்.இன்றைய காலத்தில் கல்லூரி வாழ்கையை அனைவரும் அனுபவிக்கக் கூடியவர்களாக இருக்கிறோம்.கல்லூரி என்பது சிந்தனைக்கு மட்டும் சுதந்திரம் தராமல் செயல்களுக்கும் சுதந்திரம் அளிக்கக் கூடிய இடமாக இருக்கிறது.கல்லூரி வாழ்க்கையில் மாணவர்களுக்கு அதிக சுதந்திரம் இருப்பதாலும் உணர்ச்சிகள் நிறைந்த வயதில் அவர்கள் இருப்பதாலும் , அதிக தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை நாம் நடைமுறையில் பார்த்து வருகிறோம்.இப்படிப்பட்ட கல்லூரி வாழ்க்கையில் ஏற்படும் அவலங்களை பற்றியும்,எப்படிப்பட்ட கல்லூரியில் தங்களுடைய பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்பதை பற்றியும் கல்லூரி வாழ்கையை மாணவர்கள் எப்படி அமைத்துக் கொண்டால் மறுமையிலும் இம்மையிலும் வெற்றி பெற முடியும் என்பது பற்றியும் இந்த கட்டுரை அமைந்திருக்கிறது.

கல்லூரிகளை தேர்ந்தடுப்பது

கல்லூரியில் சேருவதற்கு முன் எந்த துறை எடுத்தால் அதிக வேலைவாய்ப்பு இருக்கும் என்பது பற்றியும் அங்குள்ள வசதிகள் பற்றியும் அதிக கவலைப்படும் பெற்றோர்கள் , தங்களுடைய பிள்ளைகளின் மார்க்க அறிவை பற்றி கண்டு கொள்வதே இல்லை.நாம் மேல் கூறிய காரணங்களை பார்க்க வேண்டாம் என்று கூறவில்லை அதோடு சேர்த்து மார்க்க செயல்பாடுகள் உள்ள கல்லூரிகளை பார்த்து தேர்ந்தெடுப்பது சிறந்தது.அதிக பணத்தை கொடுத்து பெரிய கல்லூரியில் சேர்த்து விட்டு தன்னுடைய பிள்ளைக்கு நாம் நல்ல எதிர்காலத்தை அமைத்துவிட்டோம் என்று தப்பு கணக்கு போடுகின்றனர்.எத்தனையோ மாணவர்கள் கல்லூரியில் போதை பழக்கத்திற்கும், மது பழக்கத்திற்கும் ஆளாகியதால் மருத்துவமனையில் புலம்பும் பெற்றோர்களை நாம் பார்க்காமல் இல்லை.இதுமட்டுமல்லாமல் கல்லூரியில் காதல் வாயப்பட்டு, எவ்வளவு கஷ்டப்பட்டு தன்னுடைய பெற்றோர்கள் தன்னை வளர்த்திருப்பார்கள் என்பதை கூட மறந்து ஓடிப் பொய் திருமணம் செய்துக் கொள்ளும் காட்சி அரங்கேறுகிறது.முக்கியமாக ஆண் பெண் சேர்ந்து படிக்கும் கல்லூரிகளை தவிர்ப்பது சிறந்தது.இதன் மூலம் பல தீய காரியங்களை தவிர்த்துக் கொள்ளலாம்.தம்முடைய மானத்தையும் உரிமையையும் இழந்துதான் படிக்க வேண்டும் என்றால் படிப்பை விட மானம் சிறந்தது என்று முடிவெடுக்க வேண்டும்.ஆகவே கல்லூரியின் தரத்தை மட்டும் பார்க்காமல் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை எடையிட்டு மார்க்கத் தொடர்போடு இருக்கும் வகையிலான கல்லூரியை தேர்ந்தெடுக்க வேண்டும்.


புகை,மது

ஒரு மாணவன் பள்ளி படிப்பு முடிக்கும் வரை தன் பெற்றோரின் கண்காணிப்பில் இருப்பதாலும் பள்ளியில் ஆசிரியரின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும் புகை மது போன்ற தீய பழக்கங்களை நாடுவதில் அதிகம் வாய்ப்பு இல்லை.கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்படுவதால் ,புகைப் பழக்கத்திற்கும் மது பழக்கத்திற்கும் ஆளாகின்றனர்.இஸ்லாத்தில் போதை பொருட்கள் தடுக்கப்பட்டுள்ளது என்பது கூட தெரியாத முஸ்லிம் பெயர் தாங்கி மாணவர்கள் இருக்கிறார்கள்.சில மாணவர்கள் தவறு என்று தெரிந்தும் "கல்லூரியில் அனுபவிக்காமல் வேறு எப்போது அனுபவிப்பது" என்ற ஒரு கேடுகெட்ட தத்துவத்தை கூறிக்கொண்டு இந்த பழக்கத்தை தொடர்கின்றனர்.அல்லாஹ்விடம் தவ்பா செய்யக் கூட நேரம் இல்லாமல் அவருடைய மரணம் அவரை அடைந்தால் மறுமையில் அவரின் நிலை என்ன என்பதை சிந்திக்க மறுக்கிறார்கள்.

தீய நண்பர்கள் காரணமாகவே இதுபோன்ற பழக்கங்கள் ஊக்குவிக்கப்படுகிறது.இது போன்ற தீய நண்பர்களை தவிர்ப்பதே சிறந்தது.சிறு வயதில் குழந்தைகளை வளர்கும்போதே அவர்களிடம் மார்க்கத்தை பற்றியும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ள தீய விஷயங்களை பற்றி போதிக்காததும் இதற்க்கு காரணம்.

சிலர் புகை பிடிப்பதை மக்ரூஹ் என்றுக் கூறிக் கொன்று அவர்கள் செய்யும் தவறை நியாயப் படுத்துகிறார்கள்.இவர்களுடைய வாதம் நிச்சயமாக தவறானதாகும்.இவர்களுடைய தீய செயலை ஷைத்தான் அழகாக்கிக் காட்டுவதை தவிர வேறில்லை.

“நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; நல்ல அமல்களைச் செய்யுங்கள்”… (அல்குர்ஆன் 2:168, 172, 23:51, 5:88)

“(மேலும்) உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள்”… (அல்குர்ஆன் 2:195)

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்!உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.(அல்குர்ஆன் 7:31)

மது அருந்தும் பழக்கம் நபிகள் நாயகம் காலத்திலேயே இருந்ததால் நமக்கு மது அருந்த நேரடியான நேரடியான தடை இருக்கிறது.கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் அதிலும் நகரப்புற மாணவர்களிடம் அதிகமாக மது பழக்கம் நுழைந்து விட்டது.மது அருந்துவது எதார்த்தமாகவும் அருந்தாதவரை கேலி செய்வதும் மட்டம் தட்டுவதுமான நிலைமை இருந்து வருகிறது.இதில் இஸ்லாமிய பெயர் தாங்கி மாணவர்களும் போதையில் மிதக்கிறார்கள் என்பது தான் மிகவும் கவலைக்குரிய விஷயம்.கல்லூரி வாழ்க்கையில மது அருந்தாதவர்களை நான்காக பிரிக்கலாம்.

1. வாய்ப்பு கிடைக்காதவர்கள் : இவர்களுக்கு மது அருந்தும் வாய்ப்பு கிடைத்தால் அதற்க்கு அடிமையாகும் வாய்ப்பு உள்ளது.

2. மதுவின் தன்மையையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பிடிக்காதவர்கள் : இவர்களுக்கு மது பிடிக்காவிட்டாலும் ,புகை போன்ற வேறு பழக்கிதிர்க்கு ஆளாகலாம்.

3. உடல் நலத்தால் மதுவை தவிர்ப்பவர்கள் : இவர்களை நண்பர்கள் வர்புருத்தினால் இவர்களும் படி படியாக மது பழக்கத்தில் நுழைந்து விடலாம்.

4. ஈமானில் உறுதியாக இருப்பவர்கள் : மேல் கூறிய மூன்று காரணங்களை விட இதுவே நிலையானதும் , சிறந்ததுமாகும்.இஸ்லாம் மது அருந்துவதை முழுமையாக தடை செய்துள்ளது என்பதை விளங்கி அதை உறுதியாக நம்பினால் ஷைத்தானால் வழிகெடுப்பது மிகவும் சிரமம்.சிறு வயது முதலே இஸ்லாத்தை அழகிய முறையில் ஊட்டி வளர்த்தல் இந்த தகுதியை உங்கள் பிள்ளைகளிடமும் நீங்கள் எதிர்பார்க்கலாம்.

“(நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மனிதர்களுக்குச் (சில) பயன்களும் இருக்கின்றன. எனினும், அவ்விரண்டின் பயனை விட அவ்விரண்டின் கேடு மிகப் பெரியதாகும்!” எனக் கூறுவீராக! மேலும், தாம் “எதைச் செலவு செய்வது?” என்றும் உம்மிடம் கேட்கின்றனர். “(தேவைக்குப் போக) மீத முள்ளதை!” எனக் கூறுவீராக! நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறே அல்லாஹ் வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்.” (2:219)

தீய நண்பர்கள்

நண்பர்கள் என்றாலே தீயவர்கள் என்று இஸ்லாம் கூறவில்லை மாறாக தீய நண்பர்களையே இஸ்லாம் தவிர்க்க கட்டளையிடுகின்றது.அதுமட்டுமல்லாமல் நல்லவர்களுடன் தோழமை கொள்வதை இஸ்லாம் வலியுறுத்தக் கூடிய மார்க்கமாக இருக்கிறது.

மலர்ந்த முகத்துடன் உனது சகோதரனை நீ சந்திப்பது உட்பட எந்த நல்ல காரியத்தையும் அற்பமாக நினைத்து விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி)
நூல் : முஸ்லிம் (4760)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப் போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (3336)

கல்லூரியில் நண்பர்கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது அது சிறந்ததும் இல்லை.அந்த நண்பர்களை தேர்ந்தெடுப்பது மிக முக்கியமாக இருக்கிறது.கல்லூரியில் மட்டுமல்லாமல் அணைத்து நேரங்களிலும் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம்.தீய குணம் கொண்டவரை நட்பு பாராமல் நல்ல குணம் கொண்டவரிடமே நட்பு கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு வலியுறுத்துகிறது.ஊர் சுற்றுபவரிடமும்,புகை,மது அருந்துபவரிடமும்,பெண்களிடமும்,செல்வந்தர்களிடமும் நட்பு கொள்ள ஷைத்தான் தூண்டுவான்,அவர்களுடன் இருக்கும் உலக பொருட்கள் அழகாக காண்பிப்பான்.அதில் மயங்கியோருக்கு உலகிளில் மறுமையிலும் தோல்வியே காத்திருக்கிறது.

பெரும்பாலான தவறுகள் தீய நண்பர்களின் தூண்டுதளினாலேயே ஊக்குவிக்கப்படுகிறது.புகை,மது,ஊர் சுற்றுவது,சினிமாவிற்கு செல்வது போன்ற பழக்கத்தின் காரணம் தீய நண்பர்களாலேயே தொடங்கப்படுகிறது.நாம் தீய செயல் செய்யும்போது அதை தடுத்து நல்லதை அறிவுரை செய்பவர்களே நல்ல நண்பர்கள்.நல்ல நண்பர்களின் இன்னொரு அடையாளம் உங்களின் நல்லதிலும் கெட்டதிலும் துணை நிற்பார்கள்.தீய செயல் செய்யும் நண்பர்களை விட நம்மை தொழுகைக்கு அழைப்பவராகவும்,நாம் செய்யும் தீய செயல்களை சுட்டிக்காட்டி அதை தடுப்பவர்களையும் நண்பராக தேர்ந்தெடுப்பது இம்மையிலும் மறுமையிலும் சிறந்ததாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்.

அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி)
நூல் : புகாரி (2101)

அல்லாஹ் எந்த ஒரு இறைத்தூதரை அனுப்பினாலும் இன்னும் எந்த ஒரு ஆட்சித் தலைவரை நியமித்தாலும் அவருக்கு நெருக்கமான இரு ஆலோசகர்கள் இருப்பார்கள். ஒரு ஆலோசகர் நன்மையை செய்யும் படி அவரை ஏவி தூண்டுவார். மற்றொருவர் தீமை செய்யும் படி அவரை ஏவி தூண்டுவார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரைப் பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : புகாரி (7198)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தனக்கு விரும்புவதை தன்னுடைய சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக ஆகமுடியாது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (13)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான். அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகுமாறு) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : புகாரி (2442)

புனைப் பெயர்
கல்லூரியில் தங்களுடைய நண்பர்களை புனைபெயர் வைத்து அழைப்பதை பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை பாப்போம்.யாரை புனைப் பெயர் வைத்து அழைக்கிரோமோ அவருடைய மணம் நோவாத வகையிலும் அந்த புனைப் பெயர் நல்ல அர்த்தத்தை கொண்டதாக இருந்தால் புனைப் பெயரில் எந்த தவறும் இல்லை.அந்த புனைப் பெயர் மற்றவற்றின் மணதை புண்படுத்தும் விதமாகவும் அதை அவர் விரும்பாத பட்சத்திலும் அதில் தீய அர்த்தம கொண்டதாகவும் இருந்தால் அதை தவிர்க்க வேண்டும்.

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
அல் குர்ஆன் 49:11.

ஆண் பெண் சேர்ந்து படிப்பது
பெரும்பாலான கல்லூரிகள் ஆண் பெண் சேர்ந்து படிக்கும் கல்லூரிகளாகவே இருக்கிறது.பெரும்பாலான கல்லூரிகள் மாற்று மதத்தவரால் நடத்தப்படுவதால் வேறு வழி இல்லாமல் நாமும் அதுபோன்ற கல்லூரிகளே தேர்ந்தெடுக்கும் கட்டாயத்தில் தள்ளப்படுகிறோம்.இஸ்லாமியர்களால் நடத்தப்படும் கல்லூரிகளில் கூட ஆண் பெண் சேர்ந்து படிக்கும் நிலையே இருந்து வருகிறது.இது மிகவும் வருத்தத்திர்க்கு உரிய விஷயம்.

எந்த வயதில் ஆண் பெண் உணர்ச்சிகள் பலவீனமாக இருக்குமோ ,எந்த வயதில் இரு பாலாரையும் பிரித்து வைப்பது அத்தியாவசியமா,எந்த வயதில் இரு பாலார் ஒன்றாக இருந்தால் அதிக கேடு வருமோ அந்த வயதில் இரு பாலாரையும் சேர்க்கும் இடமாக இன்று பெரும்பாலான கல்லூரிகள் இருந்து வருகின்றன.அதிகமான கல்லூரிகள் பெண்களை ஹிஜாப் பேணுவதை விட்டும் தடுக்கக் கூடியதாக இருக்கிறது.சில இடத்தில் மாணவிகளே ஹிஜாப் சட்டத்தை பேனாதவர்களாகவும் இருப்பதை நாம் பார்க்கிறோம்.இஸ்லாமிய பெண் தன் கையையும்,முகத்தையும் தவிர வேறதையும் அந்நிய ஆண் முன் வெளிப்படுத்தக் கூடாது என்பதில் இஸ்லாம் உறுதியாக இருக்கிறது.

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.(அல் குர்ஆன் 24:31)

ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்ற பெயரில் மிக சகஜமாக கை குலுக்கிக் கொள்வதும்,உரசிக்கொள்வதும்,சினிமா,பீச் என்று ஊர் சுத்துவதர்க்கு பெயர் நட்பு என்றும் அது அவர்களுடைய சுதந்திரம் என்றும் கூறிக் கொள்கின்றனர்.இந்த நட்புதான் பிற்காலத்தில் காதலாகவும் காமமாகவும் மாறுகிறது.இதனால் ஏற்படும் விளைவுகளை யாரும் சிந்திப்பதில்லை.

நபி (ஸல்) அவர்கள் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: இந்த (60:10-12ஆவது) வசனங்களின் ஆணைக்கேற்ப அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) நாடு துறந்து தம்மிடம் வந்த இறைநம்பிக்கை கொண்ட பெண்களை சோதனை செய்து வந்தார்கள். இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்தனையை இறைநம்பிக்கை கொண்ட பெண்களில் எவர் ஏற்றுக்கொண்டாரோ அவரிடம் "உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்'' என்று பேச்சால் மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களது கரம், விசுவாசப் பிரமாணம் வாங்கும்போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை. பெண்களிடம், "நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்'' என்று அவர்கள் வாய்மொழியாகவே தவிர வேறெந்த முறையிலும் விசுவாசப் பிராமணம் வாங்கியதில்லை. (புகாரி - 4891)

அதுமட்டுமல்லாமல் ஆண்,பெண் சேர்ந்து படிக்கும் இடத்தில் இரு பாலாரும் தனியாக இருக்கக் கூடிய நிலையும் ஏற்படலாம்.ஆண் பெண் தனியாக இருப்பதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.ஆணும பெண்ணும் கல்லூரியில் மிக சுதந்திரமாக இருப்பதால் இருவரும் பீச்,சினிமா என்று சுத்துவது மிக சகஜமாகி விட்டது.இதை கல்லூரி நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை.

ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பிரயாணம் செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்து கொண்டுள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு விட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3006

சில ஒழுங்குகள் பேணப்படும் கல்லூரிகளில் ஆண் பெண் நேரடியாக பேசாமல் செல் போன் நம்பரை பரிமாறிக் கொண்டு நண்பர்கள் என்று ஆரம்பித்து காதலில் முடிகிறது.கிராமப்புறங்களில் காதல் என்று ஆரம்பித்து வீட்டை விட்டு ஓடிப்போகும் சம்பவங்கள் அதிகம்.நகரப்புறங்களில் மிகவும் கேடுகெட்ட மேற்கத்திய கலாச்சாரம் நுழைந்து விட்டது.இன்று ஒருவனுடன் காதல் நாளை மற்றவருடன் காதல் என்று கேடுகெட்ட நிலையை நோக்கி இன்றைய நகரப்புற கல்லூரிகளில் படிக்கும் பெண்கள் ஆண்களும் இருக்கின்றனர்.தன்னுடைய கற்பை இழப்பது என்பது மிகவும் சாதாரணமாக இருக்கிறது.அது ஒரு புதிய புரட்சியாகவும் ட்ரெண்டாகவும் பார்க்கப் படுவதுதான் கொடுமையிலும் கொடுமை.இதில் இஸ்லாமிய பெயர்தாங்கி மாணவ மாணவியரும் விதிவிலக்கில்லை.ஆண் பெண் இடையே இருக்கவேண்டிய தொடர்பு இஸ்லாம் கூறும் வகையில் இருந்தால் மட்டுமே இதுபோன்ற அசிங்கங்களை தவிர்க்க முடியும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அசிங்கமான வார்த்தைகள் 

வாலிபர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும்போது தகாத அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்துவது பெருமை என்று நினைக்கின்றனர்.அதை ஒரு விளையாட்டாகவும் அதன் அர்த்தம் எவ்வளவு கேவலமானது என்பதையும் அறியாதவர்களாகவும் அது தன்னையும் தன குடும்பத்தாரையும் இழிவு படுத்துகிறது என்பதை கூட அறியாதவர்களாகவோ அல்லது மறந்தவர்களாகவோ அந்த வார்த்தைகளோடு பழகி விடும் காட்சியை நாம் பார்க்கிறோம்.இஸ்லாம் இதை வன்மையாக கண்டிக்கிறது.இதுபோன்ற வார்த்தைகளை ஒரு மூஃமின் பயன்படுத்தக் கூடாது.

விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர)
நூல்: புகாரி 6243


நான் அபூதர் (ரலி) அவர்களை (மதீனாவிற்கு மூன்று மைல் தொலைவிலுள்ள) ரபதா’ எனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது அவர் மீது (பழையதும் புதியதுமாக) ஒரு ஜோடி ஆடையும் (அதே போன்று) அவருடைய அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைக் கண்டேன். நான் (அடிமையும் எஜமானரும் ஒரே போல உடையணிந்திருப்பதைக் கண்டு வியந்தவனாக) அதைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: நான் (ஒரு முறை) ஒரு மனிதரை ஏசிக் கொண்டிருக்கையில் அவருடைய தாயை இழிவுபடுத்திப் பேசி விட்டேன். அப்போது என்னைப் பார்த்து நபியவர்கள் “அபூதர்! அவரையும் அவருடைய தாயையும் இழிவுபடுத்திப் பேசினீரா? நீர் அறியாமைக் காலத்துப் பழக்கமொன்றைக் கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்; ஊழியர்களுமாவர். அல்லாஹ் தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தான். எனவே தம் சகோதரரை தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உண்ணத் தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படி (அவர்களின் சக்திக்கு மீறிய) பணியில் அவர்களை நீங்கள் ஈடுபடுத்தினால் (அதைச் செய்வதில்) அவர்களுக்கு நீங்கள் உதவுங்கள்” என்று கூறினார்கள்.


அறிவிப்பவர்: மஉரூர், நூல்: புகாரி (30)

ஹிஜாப்


சமீப காலங்களில், கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இஸ்லாம் வலியுறுத்தும் ஹிஜாப் சட்டத்தை பேனாதவர்களாக மாறி வருகின்றனர்.இவர்கள் இதுபோன்று மாறுவதற்கு இவர்களின் பெற்றோர்களே முதல் காரணம்.வெறும் பெயரளவில் இஸ்லாத்தில் ஏற்றிருக்கும் இவர்களுக்கு தன்னுடைய மகள் ஹிஜாப் சட்டத்தை பேனாதது பெரிதாக தெரிவதில்லை அதனால் அதை கண்டிப்பதும் இல்லை.தங்களுடைய பிள்ளைகளுக்கு இஸ்லாத்தை பற்றி ஒழுங்காக எத்தி வைக்காத காரணத்தினால் , மீடியாக்களை பார்த்து வளருவதாலும் ஹிஜாப் சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதை மறந்துவிட்டு அது நமக்கு கட்டுப்பாடு என்று நினைக்கின்றனர்.சிலர் ஹிஜாப் சட்டம் சிறந்தது என்று தெரிந்தும் தன்னை வித்தியாசமாக காட்டக்கூடாது என்பதற்காக ஹிஜாப் அணிய மறுக்கின்றனர்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.

அல்குர்ஆன் 24:31

சில மாணவிகள் தங்களுடைய காரியத்தை சாதிக்க வேண்டும் என்பதற்காக பொறுப்பில் இருக்கும் மாணவர்களிடமும் ,ஆசிரியர்களிடமும் குலைந்து பேசக் கூடியவர்களாக இருக்கின்றனர்.இது நிச்சயமாக மானக்கேடான செயலாகும்.

நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.
அல்குர்ஆன்: 33:32

சினிமா

பெரும்பாலான சீர்கேடு சினிமாவால் தான் ஏற்படுகிறது.தொழுகையை பேணாமல் இருப்பதற்கும்,தீய எண்ணங்கள் மனதில் உண்டாவதர்க்கும்,பணத்தை வீண் விரயம் செய்வதற்கும்,தீய பழக்கங்கள் உண்டாவர்க்கும் இந்த கேடுகெட்ட சினிமாதான் துணையாக நிற்கிறது.ஒரு சிலர் லாபம் ஈட்டுவதற்காக சமுதாயத்தையே படுகுழியில் தள்ளும் துறை தான் சினிமா என்பது.மாணவர்களே சினிமாவை தவிர்த்துக் கொண்டு உங்களுடைய உலக மற்றும் மறுமை வாழ்வை காத்துக் கொள்ளுங்கள்.

விபசாரத்தில் மனிதனுக்குள் பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல. கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது. இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6243 அபூஹுரைரா (ரலி)

‘நிச்சயமாக கண், காது, இதயம் இவைகள், ஒவ்வொன்றும் மறுமையில் விசாரிக்கப்படும்’ 17:36.

தொழுகை

கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தொழுகையை மறந்தே வாழ்ந்து வருகின்றனர்.சினிமா,பீச்,உணவகங்கள் போன்ற இடங்களுக்கு செல்ல நேரம் இருக்கும் இவர்களுக்கு தொழுகைக்கு நேரம் இல்லையாம்.வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுவதோடு தம் கடமை முடிந்து விட்டது என்று நினைக்கின்றனர்.சிலர் ஜும்மா தொழுகையையும் அலட்சியப்படுத்துகின்றனர்.தொழுகையின் முக்கியத்துவத்தை பற்றி இவர்களுக்கு ஒழுங்காக எத்தி வைக்காததும் இறையச்சம் இல்லாததும் தான் இதற்க்கு காரணம்.

குற்றவாளிகளிடம் "உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். "நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். (அல் குர்ஆன் 74 : 45)

இஸ்லாமிய கல்லூரிகலாக இருந்தால் பள்ளிவாயில்கள் அதன் உட்புறத்தில் எழுப்பப்பட்டிருக்கும்.துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான கல்லூரிகள் இஸ்லாமியர்களின் கையில் இல்லை.இதுபோன்ற கல்லூரிகளில் தாமாக முயற்சி எடுத்து முஸ்லிம் மாணவர்களை ஒன்று திரட்டி தொழுதுக் கொள்ள வேண்டும்.தொழுகைக்கு வெளியே அனுமதிக்காத பள்ளிகளில் மாணவர்கள் ஒன்று திரண்டு கல்லூரி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தால் அனுமதி எளிதில் கிடைத்து விடும்.அப்படியும் அனுமதி அளிக்காவிட்டால் நீங்களே கல்லூரியில் ஒரு இடம் கேட்டு தொழுகை நடத்திக் கொள்ளுங்கள்.

இஸ்லாத்தை எத்தி வைப்பது
ஒவ்வொரு முஸ்லிமும் தமக்கு தெரிந்த ஒவ்வொரு மார்க்க விஷயத்தையும் மற்றவர்களிடம் எத்தி வைப்பது கடைமையாக இருக்கிறது.கல்லூரியில் நம்முடன் படிக்கும் மாணவர்களுடன் அரட்டை அடிப்பதற்கும்,பெண் மாணவிகளை பற்றி அவதூறி சொல்வதற்கும்,அசிங்கமான விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கும் நேரத்தை வீண் சியும் நாம் என்றைக்காவது மார்க்க விஷயத்தை எத்தி வைத்திருப்போமா?மாணவர்களாக இருக்கும் அந்த வயதில் தான் எதையும் ஆராய்ந்து திறந்த மனதுடம் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருக்கும்.அவர்களுடைய மதத்திலேயே அவர்கள் சந்தேகத்துடன் தான் இருக்கின்றனர்.நல்ல முறையில் நீங்கள் அவர்களிடம் இஸ்லாத்தை எத்தி வைத்து அல்லாஹ்வும் நாடினால் பலர் இஸ்லாத்தை தழுவும் வாய்ப்பு உள்ளது.நீங்கள் இஸ்லாத்தை எத்தி வைப்பதற்கு முன் உங்களையும் நீங்கள் சரி செய்துக் கொள்ள வேண்டும்.உங்களை பார்த்து இஸ்லாத்தை வெறுத்து ஓடி விடக்கூடிய நிலையை உண்டாக்கி விடாதீர்கள்.

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (அல்-குர்ஆன் 16:125)

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள் தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (அல்-குர்ஆன் 3:110)

முஸ்லிம்கள் கல்லூரிகளை உருவாக்குதல்

உலக கல்வியுடன் மார்க்க கல்வியும் அவசியம் என்று மேடைகளிலும் கட்டுரைகளிலும் பதிவு செய்தால் மட்டும் போதாது , நம் சமுதாயத்தில் உள்ள செல்வந்தர்கள் இஸ்லாமிய அடிப்படையில் கல்லூரிகள் அமைய உதவி செய்ய முன் வர வேண்டும்.பள்ளிவாசல்களை அளவுக்கதிகம் கட்டுவதிலும் , பள்ளிவாசல்களில் ஆடம்பரம் செய்வதிலும்,தங்களுடைய பிள்ளைகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்வதிலும்தான் நம் சமுதாயத்தில் வாழும் செல்வந்தர்கள் தங்கள் செல்வங்களை செலவு செய்கிறார்களே தவிர சமுதாய பணிகளுக்கு செலவிடுவது மிகவும் குறைவாகவே இருக்கிறது.சிலர் மார்க்கம் தடை செய்துள்ள திரையரங்குகளிலும்,மது கடைகளிலும் தங்கள் செல்வங்களை முதலீடு செய்கிறார்கள்.இவர்களுக்கு மார்க்க சிந்தனையும் இல்லை சமுதாய சிந்தனையும் இல்லை.தமிழகத்தில் நம்மை விட குறைந்த மக்கள் தொகையை கொண்டுள்ள கிறித்தவர்கள் நம்மை விட பல மடங்கு அதிகமாக பள்ளிக்கூடங்களையும் கல்லூரிகளையும் நடத்துகின்றனர்.முஸ்லிம் மாணவர்கள் வேறு சமுதாய மக்களின் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் படிக்க வேண்டி இருப்பதால் மார்க்க அறிவு இல்லாமல் மாற்று மத சாயலில் வளரும் குழந்தைகளாக இருக்கின்றனர்.இந்த நிலையை மாற்ற நம் சமுதாயத்தில் உள்ள செல்வந்தர்களும் நடுதிர வர்க்கத்தினரும் இணைந்து இஸ்லாமிய பள்ளிகளையும் கல்லூரிகளையும் அதிகப் படுத்த வேண்டும்.மிகவும் பின் தங்கிய நம் சமுதாயத்தை உலக அறிவிலும் மார்க்க அறிவிலும் முன்னேற்ற இதுவே சிறந்த வழி.

http://www.frtj.net/
முஹமது ரஃபீக்(FRTJ)

Sunday, 22 May 2011

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?



10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம். 1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு, 2. பட்டய படிப்பு (டிப்ளோமா), 3. சான்றிதழ் படிப்பு (ITI)

பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல் நிலை (+1,+2) படிப்புதான். அதை பற்றி முதலில் பார்ப்போம்.

I.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு : 

1. First Group எனப்படும் கணிதம், வேதியில், இயற்பில், உயிரியல் பிரிவு : பெரும்பாலும் மாணவர்கள் விருப்பும் பிரிவு. இந்த பிரிவில் படிப்பதன் மூலம், பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma), மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc…), சட்டம், ஆசிரியர் படிப்புகள், ஆராய்சி படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் மேல் படிப்பு படிக்கலாம். அரசு துறை, தனியார்துறை என பெரும்பாலான துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. இந்த பிரிவில் படிப்பது மிக சிறந்தது. எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்பு உள்ள பிரிவு இதுதான், எனவேதான் இந்த பிரிவிற்க்கு அதிக போட்டி இருக்கும், மாணவர்கள் பெரும்பாலும் இந்த பிரிவில் படிக்க முயற்சி செய்யவும். குறிபிட்ட பள்ளிகளில் இந்த குரூப் கிடைக்காவிட்டால், இந்த குரூப் கிடைக்கும் பள்ளியில் சேருங்கள்.

2. கணிதம், வேதியில், இயற்பில், கணினி அறிவியல் பிரிவு : பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (மருத்துவம் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). மருத்துவ துறை தவிர்த்து மற்ற பெரும்பாலன துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. First Group கிடைக்காத மாணவர்கள் இந்த குரூபையாவது தேர்ந்தெடுக்கவும். அதிக வேலைவாய்ப்பு பெற்றுதரும் குரூப்பில் இதுவும் ஒன்று.

3. வேதியில், இயற்பில், தாவரவியல், விலங்கியல் பிரிவு : மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc…) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (பொறியியல் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). அதிகமாக மருத்துவம் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது

4. Commerce, Accountancy, பொருளாதாரவியல் பிரிவு : B.Com, CA (Charted accountant ), M.Com படிப்பதர்க்கான பிரிவு, அரசு வேலை, Accountancy துறையில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளது.

5. வரலாறு, பொருளாதாரவியல் : எதிர்காலதில் B.A. M.A படிக்கலாம். அரசு தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பு, ஆசிரியர் பணிகள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் உள்ளன

6. Vocational குரூப் : தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவு, பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது.

II. பட்டய படிப்பு (டிப்ளோமா): 

இது 3 ஆண்டு படிப்பு. தொழில் நுட்பதுறைகள் , மருத்துவ துறைகள், கடல்சார் துறைகள், ஆசிரியர் படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் டிப்ளோமா படிப்புகள் உள்ளன. தொழில் நுட்ப டிப்ளோமாவில் Automobile, EEE, ECE, Mechanical, civil etc… போன்ற துறைகள் சிறந்த துறைகள். மேலும் பல சிறந்த பிரிவுகள் உள்ளன. டிப்ளோமா படித்து மேற்கொண்டு பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம். பொறியியல் (B.E/B.Tech) படிக்க ஆர்வம் உள்ளவர்கள் டிப்ளோமா படித்து பொறியியல் படிப்பது சிறந்ததல்ல (Not Advisable ). 12 ஆம் வகுப்பு முடித்து பொறியியல் படிக்கவும். டிப்ளோமா மட்டும் படிக்க விரும்புவர்கள் 10 -ஆம் வகுப்பிற்க்கு பிறகு டிப்ளோமா படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது.

III. சான்றிதழ் படிப்பு (ITI): 

இது ஓராண்டு படிப்பு. Fitter welder, machinist , AC mechanic போன்ற துறைகள் சிறந்த துறைகள். இன்னும் மருத்துவம் சார்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த பல்வேறு படிப்புகள் ITI-ல் உள்ளது. உடனடி வேலைவாய்பிற்க்கு ஏற்ற படிப்பு, ஆனால் அதிக சம்பளம் கிடைக்காது.

10 – ஆம் வகுப்பு முடித்த பிறகு வேலை வாய்ப்பு

(கோரிக்கை:- தயவு செய்து மாணவர்களை 10 -ஆம் வகுப்பு மேல் படிக்க வையுங்கள்)

1. சிறு தொழில் நுட்ப பயிற்சிக்கு பிறகு வேலை. (தமிழகத்தில் அரசு, மாணவர்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் தொழில் பயிற்சி அளித்து வருகின்றது.)
2. இராணுவத்தில் வேலை மற்றும் அரசு வேலை, இரயில்வேயில் வேலை etc…
3. Date Entry வேலைகள்
4. சமுதாய கல்லூரிகள் மூலம் 6 மாத பயிற்சிக்கு பிறகு உடனடி வேலைவாய்ப்பு.

S.சித்தீக்.M.Tech. 
TNTJ student wing

Friday, 20 May 2011

மீண்டும் தலையெடுக்கும் மீடியா பயங்கரவாதம்!

கண்ணியத்துக்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ் தன்திருமறையில்...


(நம்மை) மறுப்போரை நாம் விட்டு வைத்திருப்பது அவர்களுக்கு நல்லது என்று அவர்கள் நினைக்க வேண்டாம். பாவத்தை அவர்கள் அதிகமாக்கிக் கொள்வதற்காகவே விட்டு வைத்துள்ளோம்.இழிவுபடுத்தும் வேதனை அவர்களுக்கு உண்டு. நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்து காட்டாமல் நீங்கள் எப்படி (கலந்து) இருக்கிறீர்களோ அப்படியே (கலந்திருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் விட்டு விட மாட்டான். மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான்.எனவே அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்புங்கள். நீங்கள் நம்பிக்கைக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு (அல்குர்ஆன்: 3:178-179) 

மேலோட்டமாகச் சொல்லப்படும் சம்பவங்களில் ஊடுருவி அதில் உள்ளடங்கியிருக்கும் செய்திகளை உலகுக்கு உணர்த்துவது தான் ஊடகங்கள் எனப்படுபவையாகும்.நிகழ்ந்துவிடும் சம்பவங்கள் காரியங்கள் எதுவாயிருப்பினும், யாருடையதாயிருப்பினும் உள்ளதை உள்ளபடியே விளக்கிக் காட்டும் காலக் கண்ணாடிகளாய் இருக்க வேண்டியவை தான் ஊடகங்கள் என்பவையாகும்.


ஆனால் தாம் ஏற்றிருக்கும் தொழில் தர்மத்தை புறந்தள்ளி விட்டு அற்பத்திலும் அற்ப லாபங்களுக்காக அற்பமானவர்களின் அடிவருடும் ஆபத்தை ஊடகங்கள் செய்து வருகின்றன.உண்மையின் வெளிச்சத்தைக் கொண்டு எந்த ஒன்றையும் அணுகவும் ஆய்வும் செய்திட வேண்டியவர்கள் ஓரவஞ்சனைக்கு இடந்தருவதால் உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்ட மட்டுமே முடிகிறது.

மெய்யறிவையும் தொலைநோக்குப் பார்வையையும் தங்களுக்குள் நிலைப்படுத்திக் கொள்ளாத காரணத்தால் ஊடகங்கள் பலவீனங்களுக்கு பலியாகிப் போய் மக்களை ஊனப்படுத்துகின்றன.இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமிய தீவிரவாதம் ஆகிய சொற்களை மக்கள் மனதிலே பசுமரத்தாணியாய் பதிய வைத்த பெருமை ஊடங்களையே சாரும். அதிலும் குறிப்பாக அமெரிக்கா  ஐரோப்பிய ஊடகங்கள் தான் இஸ்லாமிய வளர்ச்சியை பொறுக்க முடியாமல் இந்த வார்த்தைகளைக் கட்டவிழ்த்து விட்டன. உலகில் தன் கைவசம் அதிகமான ஊடகங்களை வைத்திருக்கும் யூத சக்திகள் இதனை திட்டமிட்டே பரப்பின. உலகெங்கும் பரப்பப்பட்ட இந்த வார்த்தைகள் இந்தியாவிற்குள்ளும் திட்டமிட்டே கொண்டு வரப்பட்டன. இஸ்லாத்திற்கு எதிரான ஊடகங்களும், தங்களை நடுநிலையாளர்களாக காட்டிக் கொண்டு மக்கள் மத்தியில் வலம் வந்த ஊடகங்களும் இஸ்லாமிய தீவிர வாதிகள் பயங்கரவாதிகள் என கொஞ்சமும் கூச்சமின்றி எழுதித் தள்ளின.

 அமைதி பூங்காவாய்த் திகழும் தமிழகத்திற்குள்ளும் இந்த விஷமப் பிரச்சாரம் ஊடுவிருயது. தமிழகத்தின் அனைத்து முன்னணி சேனல்களும், பத்திரிக்கைகளும் கொஞ்சமும் அஞ்சாமல் இந்த வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தின. சாதாரணமாக ஒரு பெயர் தாங்கி முஸ்லிம் மாட்டிக் கொண்டால் கூட அவனை இஸ்லாமிய பயங்கரவாதி என்றும், ஒரு கொள்ளைக் கூட்டத்தில் ஒரு முஸ்லிமும் மாட்டிக் கொண்டால் அவனுடைய பெயரைக் குறிப்பிட்டு, இஸ்லாமியன் உள்ளிட்ட 5 பேர் சிக்கினர் என்றும் செய்தி எழுதும் அவலமும் நம் தமிழகத்தில் நிகழ்ந்து வந்தது. நிலைமையின் தீவிரம் உணர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இஸ்லாம் குறித்த சரியான புரிதலை ஊடகங்கள் மத்தியிலே மிகக் கடுமையாகக் கொண்டு சென்று சேர்த்தது. இறைவனின் மாபெரும கிருபையால் சில நாட்களாக இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற வார்த்தை ஒரளவிற்கு தவிர்க்கப்பட்டு வருகின்றது.

 இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு ஒசாமா, பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி ஊடகங்களில் வெளியானது. சில ஐரோப்பிய ஊடகங்களே, ஒசாமா இறந்தது போலியான செய்தி என்றும், வெளியிடப்பட்ட புகைப்படம் ஜோடிக்கப்பட்டது என்றும் செய்திகளை வெளியிட்டன. ஆனால் யூத, அமெரிக்க ஊடகங்கள் வழக்கம் போல தங்களின் பழைய பணியைச் செய்ய ஆரம்பித்தன. ஒசாமா இறந்ததாக செய்தி வெளியாகிய நாளில் இருந்து தொடர்ந்து 4 நாட்களுக்கு இதுதான் செய்தியாக இருந்தது.ஒசாமாவின் வரலாறு என்ற பெயரில் பலவிதமான ஆவணப்படங்கள் எல்லா சானல்களிலும் ஒளி பரப்பப்பட்டன. ஆனால் அது ஒசாமாவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறாமல், சாந்தி மார்க்கம் இஸ்லாத்தை குதறும் பணியை மட்டுமே மேற்கொண்டன.

புகழ்பெற்ற டிஸ்கவரி சேனலின் தமிழ் ஒளிபரப்பில் தொடர்ந்து 3 நாட்கள் ஒசாமா பற்றிய ஆவணப்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. இதில் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற பெயரில் அவர்களின் கற்பனைக் கதைகளைக் கட்டவிழ்த்து விட்டனர். மாற்றானின் கலாச்சாரங்களை இஸ்லாத்தின் மீது திணிக்காமல் தடுக்க வேண்டுமானால், அதற்கு ஒரே வழி ஆயுதமேந்துவதுதான் என்ற இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் படி தான் ஒசாமா தீவிரவாதியாக மாறினார் என தங்களின் இஸ்லாமிய காழப்புணர்ச்சியைக் காட்டியது டிஸ்கவரி சானல்.

உலக பயங்கரவாதத்தின் தலைவனான அமெரிக்கா, தன்னுடைய தீவிரவாத மையங்களை உலகம் முழுவதும் ஏற்படுத்தி உலகத்தை தன் ஆளுகையின் கீழ் கொண்டுவர திட்டமிட்டு காய் நகர்த்துகின்றது என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே! அன்றைக்கு ரஷ்யாவை எதிர்க்க வேண்டி அமெரிக்காவுக்கு தளபதியாக செயல்பட்ட ஒசாமாவின் நடவடிக்கைகள் அன்றைக்கு தீவிரவாத, பயங்கரவாத நடவடிக்கையாக அமெரிக்காவுக்குத் தெரியவில்லை. ஆனால் இஸ்லாமியர்களை அழிப்பதும், நாடு பிடிப்பதும் மட்டுமே அமெரிக்காவின் நோக்கம் என்ற அமெரிக்காவின் குரூர முகத்தை கண்டுகொண்ட ஒசாமா, அமெரிக்காவுக்கு எதிராக திரும்பியபோது, அவர் தீவிரவாதியாக, சர்வதேச பயங்கரவாதியாக அடையாளம் காட்டப்பட்டார்.

 ஆக உலக பயங்கரவாதி அமெரிக்கா செய்யும் இனச் சுத்தகரிப்பு வேலைகளும், அநியாய போர்களும் மற்ற நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதும் இந்த ஊடகங்களுக்கு பயங்கரவாதச் செயலாகத் தெரியவில்லை.ஆனால் அமெரிக்காவை எதிர்த்து போராடிய ஒருவரை பயங்கரவாதியாக சித்தரிக்கும் அமெரிக்காவிற்கு ஊதுகுழலாக இந்த ஊடகங்கள் செயல்படுகின்றன. இதன் மூலம் இஸ்லாமியர்களையும், இஸ்லாத்தையும் அழித்து விடலாம் என கனவு காணும் அமெரிக்க, ஐரோப்பியாவின்; இந்த கீழ்த்தரமான வேலைகளுக்கு நடுநிலையாக செயல்பட வேண்டிய ஊடகங்கள் பலியாவதுதான் வருந்தத்தக்க விஷயமாக இருக்கிறது.

ஒசாமா செய்தது பயங்கரவாதம் என்றால், உலகத்தை ஆள நினைக்கும் அமெரிக்கா செய்வது என்னவென்று இவர்களுக்கு புரியாமல் இல்லை.ஆனாலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் எழுதித்தரும் செய்திகளை ஒரு எழுத்து பிசகாமல் எழுதி தங்களின் விசுவாசத்தை காட்டும் இந்த ஊடகங்களுக்கு இது மாபெரும் தவறு என்று புரிந்து கொள்ளும் காலம் வரும்போது தான் ஊடகத்துறை தெளிவு பெறும். இன்ஷாஅல்லாஹ் அந்த காலம் விரைவிலேயே வரும்;; என்று நம்புவோம். 

மும்பை குண்டு வெடிப்பு: நகைப்புக்கிடமான நியாயங்கள்!

மும்பை குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருந்து தப்பியோடி சவுதி அரேபியாவில் அடைக்கலம் புகுந்துள்ளதாகச் சொல்லி அவனை பிடித்து தண்டிக்க வேண்டும் என்று ஊடகங்களில் காரசாரமான வாத பிரதிவாதங்கள் நடந்து வருகின்றன. மும்பை குண்டு வெடிப்பை தாவுத் இப்ராஹிம் நடத்தி முடித்தான் என்பது எவ்வாறு உண்மை என்று சொல்கின்றார்களோ அதே அளவுக்கு சிவசேனா மற்றும் சங்பரிவார கும்பல் மும்பையில் முஸ்லிம் இனப்படுகொலையை நடத்தினார்கள் என்பதும் உண்மை.

 சிவசேனா, சங்பரிவார் நடத்திய படுகொலைக்கு பதிலடிதான் மும்பை குண்டு வெடிப்பு என்பது அனைவருக்கும் தெரியும்.அதனால் மும்பை குண்டு வெடிப்புக்காக தாவுத் இப்ராஹிம் தேடி அலையும் அளவுக்கு, அதற்கு அடிப்படையாக அமைந்த மும்பை முஸ்லிம் இனப் படுகொலைகாரர்களையும் தேடிப்பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டுமா? இல்லையா? இது குறித்து மத்திய அரசும் அக்கறை காட்டவில்லை.

மாநில காங்கிரஸ் அரசும் மெத்தனமாக நடந்து கொள்கிறது. தாவுத் இப்ராஹிம் குறித்து அண்டா அண்டாவாக விமர்சனம் செய்யும் ஊடகங்களும் கூட மும்பை முஸ்லிம் இனப் படுகொலையின் பதிலடிதான் மும்பை குண்டு வெடிப்பு என சொல்லாமல் இருட்டடிப்பு செய்து வருகின்றன.

மும்பை குண்டு வெடிப்பை நடத்திய தாவுத் இப்ராஹிம், நாடு நாடாக ஓடி, தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறான். ஆனால் மராட்டியத்தில் முஸ்லிம் இனப் படுகொலைகளை நடத்திய சிவசேனா, சங்பரிவார தலைவர்கள் அரசியல் பதவிகளிலும், அரசுப் பதவிகளிலும் அமர்ந்திருக்கிறார்கள்.

 இது எவ்வளவு பெரிய கொடுமை? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை விதி. இந்த அடிப்படை விதிக்கு மாறாக யாரும் நடந்து கொள்ளக் கூடாது.மும்பை முஸ்லிம் இனப் படுகொலையை நடத்திய பால்தாக்கரே மற்றும் சங்பரிவாரங்களுக்கு ஒரு நீதி. மும்பை குண்டு வெடிப்பை நடத்திய தாவுத்துக்கு இன்னொரு நீதி என்பது மனுதர்மத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். உண்மையான நீதிக்கு இது ஒரு காலத்திலும் ஒத்து வராது.

தாவுத் இப்ராஹிம் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு முன்பாக அவனை குண்டு வைக்கத் தூண்டிய சங்பரிவார தலைவர்களும் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும்.இதில் ஒருவர் மட்டும் தண்டிக்கப்பட்டு, மற்றவர் விடுவிக்கப்படுவது நாட்டிற்கு ஆபத்து. நாட்டு மக்களுக்கு ஆபத்து. இதை ஆள்வோர் தெரிந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மகத்தான அதிபதி அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

 அநீதி இழைத்தோர் செய்து கொண்டிருப்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவன் என்று எண்ணி விடாதீர். பார்வைகள் நிலை குத்தி நிற்கும் ஒரு நாளுக்காகவே அவர்களை அல்லாஹ் தாமதப்படுத்தியிருக்கிறான்.

(அந்நாளில்) தமது தலைகளை உயர்த்தியோராக தறிகெட்டு ஓடுவார்கள். (நிலை குத்திய) அவர்களின் பார்வை பழைய நிலைக்குத் திரும்பாது. அவர்களின் உள்ளங்களும் செயலற்று விடும்.

அவர்களை வேதனைப்படுத்தும் நாளைப் பற்றி மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அந்நாளில்) எங்கள் இறைவா! குறைந்த காலம் எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக! உனது அழைப்பை ஏற்றுக் கொள்கிறோம். தூதர்களைப் பின் பற்றுகிறோம் என்று அநீதி இழைத்தோர் கூறுவார்கள். உங்களுக்கு அழிவே வராது என்று இதற்கு முன் சத்தியம் செய்து நீங்கள் கூறிக் கொண்டிருக்கவில்லையா? (அல்குர்ஆன்: 14 : 42-44)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், தமது அறையின் வாசலுக்கருகே (சிலர்) சச்சரவிட்டுக் கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்களிடம் சென்று, நான் ஒரு மனிதனே. என்னிடம் வழக்காடுபவர்கள் வருகின்றார்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கலாம். அவர்தான் உண்மையை பேசியுள்ளார் எனக் கருதி, நான் அவருக்கு சாதகமாகத் தீர்;ப்பளித்து விடுவேனாயின், எவருக்கு ஒரு முஸ்லீமின் உரிமையை எடுத்துக் கொள்ளும்படி நான் தீர்ப்பளிக்கின்றேனோ அது அவருக்கு நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும் அவன் விரும்பினால் அதை எடுத்துக் கொள்ளட்டும். அல்லது அதை விட்டு விடட்டும் என்று கூறினார்கள்.(அறிவிப்பவர்: உம்முஸலமா(ரலி) புகாரி 2458)

நன்நம்பிக்கைக் கொண்டவர்களே! (வழிதவறி விடாமல்) உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேர்வழி பெற்றுவிட்டால், நேர்வழியை விட்டு தவறியவர் உங்களுக்கு இடையூறு அளிக்க வேண்டாம். (அல்குர்ஆன்: 5:105) 

நான் அல்லாஹ்வின் தூதர்)ஸல்)அவர்கள் கூற கேட்டுள்ளேன். நிச்சயமாக மக்கள் அநியாயம் புரிபவனைப் பார்த்து விட்டு அவன் கரங்களைப் பிடித்து திருத்தவில்லை என்றால் அல்லாஹ் தனது வேதனையைக் கொண்டு அம்மக்கள் அனைவரையும் பொதுவாகப் பிடித்து விடக் கூடும்.(அபூபக்கர் (ரலி) புகாரி)

அல்லாஹ் கூறுகிறான்: 
எச்சரிக்கை! அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! (அல்குர்ஆன் 11:18)

நான் இப்னு உமர்(ரலி) அவர்களுடன் அவர்களுடைய கையை பிடித்தப்படி சென்று கொண்டிருந்தபோது ஒரு மனிதர் குறுக்கிட்டு, (மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசியப் பேச்சு பற்றி அல்லாஹ்வின் தூதரிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்? என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் அவர்கள் அல்லாஹூதஆலா மூஃமினை தன் பக்கம் நெருங்கச் செய்து அவன் மீது தன் திரையை போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு அவனை நோக்கி நீ இன்ன பாவம் செய்தாய் உனக்கு நினைவிருக்கிறதா? என்று கேட்பான். அதற்கு அவன், ஆம் என் இறைவா! என்று கூறவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ள செய்வான். அந்த மூஃமின் நாம் இத்தோடு ஒழிந்தோம் என்று தன்னைப் பற்றி கருதிக் கொண்டிருக்கும் போது இறைவன் இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்கு தெரியாமல் வைத்திருந்தேன். இன்று உனக்குஅவற்றை மன்னித்து விடுகிறேன் என்று கூறுவான். அப்போது அவனது நற்செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும். நிராகரிப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள், இவர்கள் தாம் தம் இறைவன் மீது பொய்யைப் புளைத்துரைத்தவர்கள் எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமகாரர்கள் மீது இறைவனின் சாபம் உண்டாகட்டும் என்று கூறுவார்கள். (ஸஃப்வான் பின் முஹ்லிஸ் அல் மாஸினி(புகாரி 2441)

 எனவே மனித சமுதாயத்தின் எந்த பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அநீதத்திற்கு இடம் தராதீர்கள். கொஞ்சமும் அசைந்து விடாதீர்கள். உங்களை சார்ந்தவர்களுக்கு ஒரு நீதி, வேண்டாதவர்களுக்கு ஒரு நீதி என்ற பாகுபாட்டை கொண்டு வராதீர்கள். ஆள்பலத்தினாலும், வாக்கு சாதுரியத்தினாலும் உலகில் நீங்கள் வென்று விடலாம். சத்தியத்தின் முன் தலைகுனிவுதான் உங்களுக்கு.

Thursday, 19 May 2011

மேலப்பாளையம் கிளையில் கல்வி வழி காட்டுதல் நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த 15-5-11 அன்று மாணவர்களுக்காகன கல்வி வழி காட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா அவர்கள் தலைமை தாங்கினார்கள். டாக்டர் சர்வத் கான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
Thanks:www.tntj.net

Wednesday, 18 May 2011

ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவம்



ஜமாஅத்தில் கலந்து கொள்ளாது தன் வீட்டில் தொழுபவரைப்போல நீங்களும் உங்கள் வீடுகளில் தொழுவீர்களானால் உங்கள் நபியின் வழிமுறையை கைவிட்டவர்களாவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் கை விட்டீர்களானால் நிச்சயம் நீங்கள் வழிதவறிப் போவீர்கள். எவர் ஒளூச் செய்து-அதை நல்ல முறையில் செய்து இப்பள்ளிகளில் ஏதேனும் ஒன்றை நாடி வருகிறாரோ அல்லாஹ் அவருக்கு – அவர் எடுத்து வைக்கம் ஒவ்வொரு எட்டுக்கும் பதிலாக ஒரு நன்மையை எழுதிஒரு பதவியை உயர்த்துகிறான். மேலும் ஒரு தீமையை அவரை விட்டும் அகற்றுகிறான். எங்களிடையே நான் பார்த்திருக்கின்றேன் பகிரங்கமான சந்தர்ப்பவாதியைத் தவிர வேறெவரும் ஜமாஅத்துக்கு வராமல் இருக்கமாட்டார். திண்ணமாக இயலாதவரைக்கூட இரண்டுபேர் கைத்தாங்கலாக அழைத்து வந்து வரிசையில் நிறுத்தப்படும் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்-முஸ்லிம்.

ஜமாஅத் தொழுகையின் சிறப்பு
ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது தன்னுடைய வீட்டில் தொழுவதை விடவும்கடைவீதியில் தொழுவதை விடவும் 25 மடங்கு அல்லது அதைவிட அதிகம் சிறந்ததாகும். ஒருவர் அழகிய முறையில் உளூச் செய்து தொழுகைக்காகவே பள்ளியை நோக்கிச் செல்வாரானால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பதவி உயர்த்தப்பட்டு ஒரு பாவம் மன்னிக்கப்படுகின்றது.
அவர் தொழுது முடித்துவிட்டு அவ்விடத்திலேயே இருக்கும்வரை வானவர்கள்இறைவா! இவருக்கு நீ அருள் புரிவாயாக! என்று பிராத்தித்துக் கொண்டேயிருப்பார்கள். உங்களில் ஒருவர் (ஜமாஅத்) தொழுகையை எதிர்பார்த்து (தொழும் இடத்திலேயே இருந்து) கொண்டிருப்பவர் தொழுகையிலேயே இருப்பார் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரி 647, முஸ்லிம்.
பள்ளிக்கு வரும் முறை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள். அப்போது அமைதியான முறையிலும் கண்ண்pயமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்கு கிடைத்த ரக்அத்துகளை (ஜமாஅத்துடன்) தொழுங்கள்உங்களுக்குத் தவறிப்போனதைப் பூர்த்தி செய்யுங்கள் - நூல்:புகாரி636, முஸ்லிம்திர்மிதி 326.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம் அப்போது சிலர் வேகமாக வரும் சப்தத்தை அவர்கள் செவியுற்றனர்தொழுகையை முடித்ததும் உங்களுக்கு என்ன நேர்ந்தது, (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்) என்று கேட்டார்கள்,அதற்குத்தோழர்கள்நாங்கள் தொழுகைக்காக விரைந்து வந்தோம் என்றனர். அவ்வாறு செய்யாதீர்கள்தொழுகைக்கு வரும்போது அமைதியாக வாருங்கள்! உங்களுக்குக் கிடைத்ததைத் தொழுது கொள்ளுங்கள்தவறியதை நிறைவு செய்து கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் – அபூகதாதா (ரலி) நூல் - புகாரி 635, முஸ்லிம்.
தொழுகைக்கு முற்கூட்டியே வந்து காத்திருப்பதன் சிறப்பு
ஒருவர் தம்முடைய வீட்டில் அல்லது கடைவீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது 25 மடங்கு சிறந்ததாகும். அதாவது ஒருவர் உளூச்செய்துஅதை அழகாகவும் செய்து தொழுகைக்காகவே பள்ளிவாசலுக்குச் செல்வாராயின் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பதவி உயர்த்தப்பட்டு ஒரு பாவம் அழிக்கப்படுகின்றது. அவர் தொழுது முடித்து விட்டு தொழுமிடத்திலேயே இருக்கும் வரை வானவர்கள்இறைவா இவருக்கு நீ அருள் புரிவாயாக என்று பிரார்த்திக் கொண்டேயிருப்பார்கள். உங்களில் ஒருவர் (ஜமாஅத்து) தொழுகையை எதிர்பார்த்து (தொழுமிடத்தில்) இருக்கும்போதெல்லாம் தொழுகையிலேயே இருக்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர் – அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 647,முஸ்லிம்.

பாங்கு சொல்வதிலும் தொழுகையின் முதல் பரிசையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்காகப் போட்டிப்போட்டுக் கொண்டு முந்தி வருவர். பின்னர் அதன் விளைவாக அவர்களிடையில் சீட்டுக் குலுக்கி எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர். மேலும் தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் அதற்காக முந்திச் செல்வர். சுபுஹுத் தொழுகையிலும் இஷாத் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவர்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளார்- அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரி615, முஸ்லிம்.

Tuesday, 17 May 2011

விபரம்கெட்டத்தனமான கணக்கும் பாப்புலர் பிராண்டும்.



பழைய படம்

தொகுதிக்கு 2000 ஓட்டுக்கள் என வாங்கி தங்களுடைய அபார பலத்தை நிர்ணயித்த பாப்புலர் பிராண்ட். (நல்ல வேளை மமக அதிமுகவிடம் தஞ்சம் புகுந்ததால் 2000 ஓட்டு கணக்கிலிருந்து தப்பித்துக்கொண்டார்கள்) தங்களுடைய வெற்றி விபரத்தை பின்வருமாறு எழுதியுள்ளார்கள்.

நன்றி! நன்றி!! நன்றி!!!

அல்லாஹ்வின் பேருதவியால் பாளையங்கோட்டை, கடையநல்லூர், பூம்புகார் ஆகிய தொகுதிகளில் SDPI மூன்றவாது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.தொண்டாமுத்தூர், திருப்பூர்-தெற்கு, துறைமுகம் ஆகிய தொகுதிகளில் SDPI நான்காவது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.டோட்டல் ஓட்டு எத்தனை என்பதை சொல்லாமல் மூன்றாம் இடம் நான்காம் இடம் என்ற கதையை கூறியுள்ளார்கள். அப்பா நான் இரண்டு பாடத்தில் வெற்றி பெற்றேன் என்று கூறிய கதையாக உள்ளது.தேர்தலின் துவக்கத்திலேயே குழப்பத்தில் துவங்கிய இந்த கட்சி மொத்தம் வாங்கிய சொச்சம் ஓட்டுகளை கூறாமல் தரவரிசை கூறி தப்பிக்கப் பார்க்கின்றது.தமிழகத்தில் தக்க பாடம் கிடைத்துள்ள நிலையில் கேரளாவுக்குத் தாவிச் சென்று அங்குள்ள புள்ளி விபரத்தை அளித்து மகிழ்சியடைந்துள்ள கதை வினோதம்.

அது குறித்த தலைப்பு (சிரிக்கவேண்டாம்)

கேரளா அரசியலில் SDPI அசைக்க முடியாத சக்தியாக மாறியது!!

http://pfikaraikal.wordpress.com/2011/05/14/%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%b3%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-sdpi-%e0%ae%85%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae/இதில் இவர்கள் போட்ட பட்டியலைப் பாருங்கள்.//வடகரை தொகுதியில் இடதுசாரி கூட்டணியை சார்ந்த சி.கே.நாணு 847 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார். ஆனால், எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஸலீம் அழியூர் பெற்ற வாக்குகளோ 3.488 ஆகும். காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பெற்ற வாக்குகள் தடையாக மாறியது குறிப்பிடத்தக்கது//

எஸ்டிபிஐ கட்சி போட்டியிடாமல் இருந்தால் அவர்களுக்கு வாக்களித்த சொச்சம் நபர்கள் யாரை ஆதரித்திருப்பார்கள் என்று முதலில் தெளிவாக கூறவேண்டும்.

கேரளத்தில் கோலோச்சும் இரண்டு கூட்டணிகளான LDF ஐயா? UDF ஐயா? என்பதை தெளிவுபடுத்திய பின்னர் எங்கள் ஓட்டு இன்னவருக்கு சாதகமானது இன்னவருக்கு பாதகமானது என்று கூறவேண்டும். அதன் முக்கியத்துவம் புரியவில்லையா? தொடர்ந்து வாசிக்கவும்.

வடகரை தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் LDF சார்ந்தவர்.
தோற்றவர் LDF ஐ சார்ந்தவர்

முழு விபரம்:Kerala - VADAKARA

    C.K.NANU Janata Dal (Secular) 46912 (LDF)
    ADV.M.K. PREMNATH SOCIALIST JANTA (DEMOCRATIC) 46065 (UDF)
    N.VENU Independent 10098
    M.P.RAJAN Bharatiya Janata Party 6909
    SAALIM AZHIYUR SOCIAL DEMOCRATIC PARTY OF INDIA 3488

இவர்கள் தனித்து நிற்காமல் UDF ஐ ஆதரித்தால் 49553 வாக்குகள் பெற்று வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பார் என்பது உண்மைதான். ஆனால் தனித்து நிற்காமல் இருந்தால் இவர்களுடைய ஓட்டு க்கு கிடைக்காது என்பதை அடுத்த குறிப்பில் தெரியப்படுத்தி அவமானப்படுவதை காணலாம்.

இவர்களை விட 6610 வாக்குகள் அதிகம் வாங்கிய ஒரு சுயேட்சை வேட்பாளருடைய (10098) ஓட்டு யாருக்கு கிடைத்திருக்குமோ அவர் அமோக வெற்றி பெற்றிருப்பாரே... ?

ஆக இங்கே காங்கிரசுக்கு பாதகமாக அமைந்ததாக பாட்டுப்பாடும் இவர்கள் அடுத்து கூறியதைப் பாருங்கள்.

//முஸ்லிம் லீக் இளைஞர் பிரிவைச்சார்ந்த கே.எம்.ஷாஜி 483 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வெற்றிப்பெற்றார். ஆனால், எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் நவ்ஷாத் பெற்ற வாக்குகளோ 2,935 ஆகும். இத்தொகுதியில் எஸ்.டி.பி.ஐ பெற்ற வாக்குகள் இடதுசாரிகளின் வெற்றியை பாதித்தது.//வாக்கு வித்தியாசம் 493 ஐ 483 என்று எழுதியுள்ளார்கள்.

முழு விபரம்:Kerala - AZHIKODE

    K.M.SHAJI Muslim League Kerala State Committee 55077 (UDF)    M.PRAKASHAN MASTER Communist Party of India (Marxist) 54584 (LDF)    M.K.SASEENDRAN MASTER Bharatiya Janata Party 7540     NOUSHAD PUNNAKKAL Independent 2935

அங்கே UDF தோற்றதற்கு நாங்கள் காரணம் என்று கூறிய இவர்கள் இங்கே LDF தோற்றதற்கும் நாங்கள் காரணம் என்று கூறுவதைப்பார்த்தால் அமெரிக்காவின் புளுகு மூட்டை தேவலாம் போலுள்ளது.ஒரு வாதத்திற்காக இவர்கள் சுயேட்சையாக நிற்கவில்லையென்றால் அழீக்கோடு தொகுதியில் LDF ஐ யும் வடகரா தொகுதியிர் UDF ஐயும் ஆதரித்திருப்பதாக ந்தால் இந்த கூற்று நியாயம் என்று பேசிக்கொள்ளலாம். ஆனால் அவ்வாறில்லை, நாங்கள் இப்படித்தான் என்று மீண்டும் கூறுவதைப் பாருங்கள்.

//திருச்சூர் மாவட்டம் மணலூர் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் பேபி ஜானின் தோல்வியில் நிர்ணாயக பங்குவகித்தது எஸ்.டி.பி.ஐ ஆகும்.483 வாக்குகள் வித்தியாசத்தில் தான் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் வெற்றிப்பெற்றார். எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பி.கே.உஸ்மான் பெற்ற 2,293 வாக்குகள் இத்தொகுதியில் காங்கிரஸின் வெற்றியை நிர்ணயித்துள்ளது.//வாக்கு வித்தியாசம் 481 ஐ 483 என்று தவறுதலாக குறிப்பிட்டுள்ளார்கள்

Kerala - MANALUR

  • P.A. MADHAVAN Indian National Congress 63077  (UDF) BABY JOHN Communist Party of India (Marxist) 62596 (LDF) P.M. GOPINATHAN Bharatiya Janata Party 10543 P.K. USMAN SOCIAL DEMOCRATIC PARTY OF INDIA 2293SURESH TACHAPPILLY Bahujan Samaj Party 594
இந்த தொகுதியிலும் நாங்கள்தான் அவர்கள் என்று புளுகியுள்ள இவர்களிடம் யாராவது "பகுஜன் சமாஜ் பார்ட்டியின்" ஓட்டுக்கள் தோற்றவர்களுக்குச் சென்றால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆக எதையாவது சொன்னால் அதில் கொஞ்சமாவது பொருத்தம் வேண்டும். திருத்தங்களும் அதிகம் தேவை, பொருத்தங்களாக எதுவும் இல்லை என்ற அளவுக்கு இவர்கள் கூறியுள்ளதைப் பார்த்தால் பொய்யன் ரஷாத் கலீஃபாவின் கண்க்கு நினைவுக்கு வருகிறது.

பொய் கலந்து இயக்கம் துவக்கினால் இதுதான் நிலைமை... பாவம் அப்பாவி உறுப்பினர்கள்.

ACTIVITIES OF TAMILNADU THOWHEED JAMATH


"TAMILNADU THOWHEED JAMATH" (TNTJ) not only conducts Rally & Conference it also rooted in the hearts of Millions of muslims across the state.. 

# Promotes Quran & Sunnah to public mass through all modes ( Television , News papers, Public Meetings, Symposiums , Seminars ) 

# Educational Awarness Programme , Around 250 Such seminars had been conducted in 2009-2010 

# Collection of Fitra & Distributing to Poor, Millions of Rupees been collected and distributed 

# Islamic Colleges , Primary Schools 

# Combined Qurbani 

# Zakath Collection and distributing to needy

# Blood Donation Camps in india & GCC countries, Ranks first in Tamilnadu, Donates minimum of 6000 + Units every year 

# Conveying Islam to Non Muslims at this best of way by symposium # Free Quran to non muslims

# Participates in Book Exhibitions and reaches millions of people 

# Clear Misunderstanding of Non muslim about Islam through ISLAM OR INIYA MARGAM 

# Telecast TV programme in TV channels 

# Debates with Counter Thelogist about Islam recently with renounwned Atheist Group 

# Fight for Social Rights for the community 

# Monitors the Political situation of muslims and guide them in rightpath 

# Home for Aged People , Orphans 

# Training Courses and all supports new muslims 

# Jumahs in more than 400 Places in Tamil nadu, Kerala, Karnataka 

# Protest and conference and Many more Alhamdulilah , Join this Movement .. May ALLAH Swt Reward us and them. 

பயணிகளின் கவனத்திற்கு!



இஸ்லாம் ஒரு நிறைவான, முழுமையான மார்க்கம். இது ஏதோ பூமிக்கு கீழே உள்ளதைப்பற்றியும், வானத் திற்கு மேலே உள்ளதைப்பற்றியும் மட்டுமே பேசக் கூடிய மார்க்கம் என்று இஸ்லாமியர்களில் பலர் தவறாக நினைக் கின்றார்கள். மாறாக நமது வாழ்க்கை முறையைப்பற்றி வேறெந்த மார்க்கமோ, மதமோ, சொல்லாத அளவிற்கு முழுமையான முறையில் கற்றுத்தரக்கூடிய மார்க்கம். இஸ்லாம் இதைப்பற்றி பேசவில்லை, இந்த விஷயத்திற்கு இஸ்லாத்தில் தீர்வு இல்லை என்று எவரும் வாய் திறக்க முடியாத வகையில் எல்லாவற்றையும் விரி வாக பேசுகிறது. இப்படி ஒரு மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக பெற்றதற்கே நாம் இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டி ருக்கிறோம். மனிதர்களின் வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கின்ற பயணம் பற்றியும் இஸ்லாமிய மார்க்கத்தில் வழிகாட்டுதல் இருக்கின்றது. பயணம் மேற்கொள்ளும்போது யாவரும் பேண வேண்டிய ஒழுக்கங்களை கற்றுத் தருகின்றது. அதில் நாம் மேற்கொள்ளும் சிரமங்களை உணர்ந்து, அதை நீக்குவதற்காக இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் சலுகைகளையும் வழங்கு கின்றது. பயணிகள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்களை இங்கே தருகிறோம். அவைகளை அறிவதின் மூலம் வீணான சிரமங்களை தவிர்த்து, பயணத்தை நன்மையானதாக மாற்றலாம்.

பயணம் ஓர் வேதனை!
பயணத்தில் இருப்பவர்கள் மார்க்க விஷயங்களில் பல்வேறு சலுகைகளை பெறுவதற்கு காரணம், பயணம் செய்வது என்பது வேதனை தரக்கூடிய விஷயம் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது. இஸ்லாம் கூறும் இந்த கருத் தினை நாம் யாரும் யோசித்து ஏற்க வேண்டியதில்லை. பயணம் செய்யும் அனைவரும் உணர்ந்தே வைத்திருக்கின்றோம். ஏனெனில் நாம் வீட்டில் சுகமாக உருண்டு, புரண்டு உறங்குவதைப்போல பயணத்தின்போது உறங்க முடியாது. அதிலும் இந்த காலத்தில் இரவு பகல் பாராமல் ஏதாவது சினிமாவையோ பாடைலையோ பேருந்தில் ஓடவிடுகிறார் கள். இந்த லட்சணத்தில் தூக்கம் எங்கிருந்து வரும்? அதிலும் இடம் கிடைக் காமல் நின்று கொண்டே பயணம் செய்ய நேர்ந்தால்... குடிகாரனிடமிருந்து வரும் மதுவின் வாடை மூக்கை துளைக்க... மற்றவர்கள் நம்மை இடிக்க... அதற்கிடையில் ஒருவர் நமது காலை அவரது பூட்ஸ் காலால் மிதிக்க... கூட்ட நெரிசலில் இடம் மாறி இறங்கி விட... இதுபோன்று நாம் பயணத்தின்போது படும் வேதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்...
பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும். அது ஒருவரது உணவை யும், பாணத்தையும், உறக்கத்தையும் தடுத்து விடுகிறது. எனவே ஒருவர் தம் தேவையை முடித்ததும் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிலி), நூல் : புகாரி 1804
பயணம் என்பது எந்தளவிற்கு வேதனையானது என்பதை நபிகளாரின் மேற்கண்ட பொன்மொழியை சிந்தித்துப் பார்த்தால் நன்கு விளங்கும். எனவே தான் குறிப்பிட்ட காரியம் முடிந்தவுடன் தாமதிக்காமல் திரும்ப வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுறுத்துகின்றார்கள்.
இரவில் தனியே செல்வதை தவிர்க்கவும்!
இந்த அளவிற்கு வேதனை மிகுந்த பயணத்தை நாம் தனியே செய்ய நேர்ந்தால் நம் கதி என்னாவது? எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவு நேரங்களில் தனியாக பயணம் செய்யக்கூடாது என்று நமக்கு அறிவுறுத்துகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனிமையில் (பயணம் செய்வதில்) உள்ள, நான் அறிந்திருக்கின்ற சிரமங்களை மக்கள் அறிந்திருந்தால் எந்தப் பயணியும் இரவில் தனியா கப் பயணம் செய்யமாட்டார்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர), நூல் : புகாரி 2998
அவசியமான நேரத்தில் இரவில் தனியாக பயணம் செய்வதில் தவ றில்லை. மேலும் நபி (ஸல்) அவர்கள் தனியாக பயணம் செய்வதால் சிரமம் ஏற்படும் என்று கூறினார்களேத் தவிர மார்க்கப்படி குற்றமான காரியமாக சொல்லவில்லை. நபிகளாரின் கட்டளைப்படி ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்கள் உளவு பார்ப்பதற்காக தனியாக பயணம் செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அகழ்ப் போரின்போது (இரவில் தனியாகச் சென்று எதிரிகளை வேவு பார்ப்பதற்கு முன்வருவது யார்?' என்று மக் களை) அழைத் தார்கள். ஸுபைர் (பின் அவ்வாம்) அவர்கள் முன் வந்தார்கள். மீண்டும் மக்களை அழைத்தார்கள். (மீண்டும்) ஸுபைர் அவர்களே முன்வந்தார்கள். மீண்டும் மக்களை அழைத்தார்கள். (மீண் டும்) ஸுபைர் அவர்களே முன் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "ஒவ் வோர் இறைத்தூதருக்கும் (பிரத்தியேகமான) உதவியாளர் ஒருவர் உண்டு; எனது (பிரத்தியேக) உதவியாளர் ஸுபைர் ஆவார்...'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர்(ரலி), நூல் :புகாரி (2997)
அகழ்ப் போரின்போது நானும் உமர் பின் அபீ சலமா (ர) அவர்க ளும் (நபி -ஸல்- அவர்கன் வீட்டுப்) பெண்கடையே (பாதுகாப்புப்) பணியில் அமர்த்தப் பட்டோம். நான் அப்போது (என் தந்தை) ஸுபைர் (ர) அவர்கள் தன் குதிரையின் மீது (சவாரி செய்தபடி யூதர்களான) பனூ குறைழா குலத்தாரை நோக்கி இரண்டு ...அல்லது மூன்று... முறை போய் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் (இருப்பிடத்திற்குத்) திரும்பி வந்த போது, "என் தந்தையே! தாங்கள் போய்க் கொண்டும் வந்து கொண்டுமிருப்பதை நான் பார்த்தேன்...'' என்று சொன்னேன். அவர்கள், "என்னை நீ பார்த்தாயா? என் அருமை மகனே!'' என்று கேட்டார்கள். நான், "ஆம் (பார்த்தேன்)'' என்று பதிலத்தேன். அதற்கு அவர்கள், "பனூ குறைழாவிடம் சென்று (உளவறிந்து) என்னிடம் அவர் களுடைய செய்தியைக் கொண்டு வருபவர் யார்?'' என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் (அந்தப் பணியைச் செய்ய ஒப்புக் கொண்டு) சென்றேன். நான் (அவர்களுடைய செய்தியை உளவறிந்து கொண்டு) திரும்பி வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னை கௌரவிக்கும் வகையில்) தம் தாய் தந்தையர் இருவரையும் சேர்த்து, "என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பண மாகட்டும் எனக் கூறினார்கள்...'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி), நூல் :புகாரி (3720)
பெண்கள் தனியே பயணித்தல்
பெண்கள் தொலைதூர பயணம் மேற்கொள்வதாக இருந்தால் அவர்கள் தனியே செல்லக்கூடாது என்று இஸ்லாம் அவர்களுக்கு கட்டளையிடுகின்றது. தனது கணவனுடனோ அல்லது திருமணம் முடிக்க தடை செய்யப்பட்ட (அண்ணன், தம்பி, மகன் போன்ற) ஆண் உறவினர்களுடனோ தான் பயணம் செய்ய வேண்டும். இதுவே அவர்களுக்கு பாதுகாப்பான பயணமாக அமை யும். எந்தளவிற்கான தொலைதூர பயணம் என்பதை பின்வரும் நபிமொழியி லிருந்து அறிலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாகப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிலி),நூல்; புகாரி 1088
ஆனால் பெண்கள் இஸ்லாம் கூறும் இந்த ஒழுக்கத்தினை பேணுவதாக தெரியவில்லை. கொழுந்தன் போன்ற மஹ்ரம் அல்லாத உறவினர்களுடன் சர்வ சாதாரணமாய் பயணம் மேற்கொள்கின்றார்கள். இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சிந்திப்பதில்லை.
அதேபோல் ஒரு நாள் பயணதூரம் பயணம் செல்வதாக இருந்தால்தான் இந்த ஒழுங்கே தவிர, அதற்கு குறைந்த தூரம் பயணம் மேற்கொள்வதாக இருந்தால் பெண்களுக்கு இந்த நிபந்தனை இல்லை. தனியாகவோ மற்ற பெண்களின் துணையுடனோ செல்லலாம்.
மேலும் வியாழக்கிழமை பயணம் செய்ய வேண்டும் என்பதை வலியு றுத்தி ஒரு செய்தி தப்ரானியில் இடம் பெற்றுள்ளது. என்னுடைய சமுதாயம் அருள்வளம் வழங்கப்பட்டுள்ளது. அதில் உள்ளதுதான் வியாழக்கிழமை என்று தப்ரானியில் இடம் பெற்றசெய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை.
பயணிகளின் துஆ
அபூஹூரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: மூன்று துஆக்கள் சந்தேகமின்றி பதிலளிக்கப்படும். 1. பெற்றோருக் காக பிள்ளைகள் செய்யும் துஆ 2. பயணியின் துஆ. 3. அநீதி இழைக்கப் பட்டவனின் பிரார்த்தனை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அபூதாவூத் 1313
இந்த ஹதீஸை ஆதாரமாக கொண்டு நம்மில் பலர் பயணம் செய்பவர்களி டத்திலும், பயணத்தில் இருப்பவர்களிடத்திலும் எனக்காக துஆ செய்யுங்கள். ஏனெனில் நீங்கள் பயணி. உங்களுடைய துஆவை அல்லாஹ் நிச்சயம் ஏற்றுக்கொள்வான் என்று பிறர்களிடத்தில் கூறுவதை காணலாம்.
எனினும் இந்த செய்தி பலவீனமானதாகும். ஏனெனில் இதன் அறிவிப்பா ளர்களில் ஒருவரான அபூஜஃபர் என்பவர் யாரென்று அறியப்படாதவராவார். ஹதீஸ்கலையின் விதிப்படி யாரென்று அறியப்படாத ஒருவர் இடம்பெற்றால் அவரது செய்தி நிராகரிக்கப்படும். எனவே இந்த செய்தி ஏற்கப்படாது. இருப்பி னும் பயணிகளின் துஆவுக்கு இறைவனின் தனிகவனம் இருக்கின்றது என்பதை பின் வரும் செய்தியிலிருந்து அறியலாம்.
அபூஹுரைரா (ரலிலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மக்களே! அல்லாஹ் தூய வன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னு டைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறை நம்பிக்கையாளர் களுக்கும் கட்டளையிட்டுள்ளான்'' என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார்கள். "தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். திண்ணமாக நான், நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் ஆவேன்'' (23:51). "நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகிறீர்கள் என்றால், அவனுக்கு நன்றி பாராட்டுங்கள்'' (2:172).
பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள் : "அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற் கொள் கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி என் இறைவா!, என் இறைவா!' என்று பிரார்த்திக்கிறார். ஆனால், அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடை செய் யப்பட்டதாக இருக்கிறது; தடை செய்யப்பட்ட உணவையே அவர் உட் கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?'' என்று கூறினார்கள். (முஸ்லிம் 1844) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த செய்தியில் யாருடைய துஆ ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை விவரிக்கின்றார்கள். அதை சாதாரணமாக ஹராமில் உழல்பவனின் துஆ ஏற்கப்படாது என்று கூறினாலே போதுமானது. ஆனால் ஒரு பயணியின் துஆவைக் குறிப்பிட்டு அவன் ஹராமில் ஈடுபடு கிறான் என்பதினால் அவனது பிரார்த்தனை நிராகரிக்கப்படும் என்று கூறுவதி லிருந்து பயணிகளின் துஆ, இறைவனின் நெருக்கத்தை பெறுகிற, இறைக் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறது என்பதை சந்தேகமற அறியலாம். அப்படிப்பட்ட துஆக்கூட ஹராமில் ஈடுபடுவதினால் நிராகரிக்கப்பட்டதாக ஆகிவிடுகின்றது என்று கவலையோடு தெரிவிக்கின்றார்கள். எனவே பயணத் தின்போது செய்யப்படுகின்ற துஆக்களுக்கு தனிச்சிறப்பு இருப்பதினால் அதிகமதிகம் பிரார்த்தனை புரிய வேண்டும்.
தொழுகையில் சலுகை
பயணத்தில் இருப்பவர்களுக்கு இறைவன் பலவிதமான சலுகைகளை வழங்குகின்றான். இந்த சலுகைகளை அறிந்து கொண்டால் நமது இறைவன் எந்தளவிற்கு அருளாளன், மனிதர்களின் உணர்வை, அவனது சக்தியை புரிந்து அதற்கேற்ப கட்டளை பிறப்பிப்பவன் என்பதை உணரலாம். மனிதனுக் கேற்ற மார்க்கம் இஸ்லாம்தான் என்பதை இந்த சலுகைகள் பறைசாற்று கின்றன.
இறைவனுக்கு மிகவும் விருப்பமான, இஸ்லாத்தின் தூண் என்று போற்றப் படும் வணக்கமான தொழுகையில் கூட நமக்காக இறைவன் சலுகை வழங்கி யிருக்கின்றான். இதை பின்வரும் ஹதீஸ்கள் விளக்குகின்றன. யஹ்யா பின் யஸீத் அல்ஹுனாயீ அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் தொழுகையைச் சுருக்கித் தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று மைல்' அல்லது மூன்று ஃபர்ஸக்' தொலைதூரத்திற்குப் பயணம் புறப்பட்டால் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள்'' என்று பதில ளித்தார்கள்.
நூல்: முஸ்லிம் 1230
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை சுருக்கித் தொழுவதற்கான அளவாக மூன்று மைல் என குறிப்பிட்டார்களா? அல்லது மூன்று பர்ஸக் என்று குறிப்பிட்டார்களா? என அறிவிப்பாளர் சந்தேகம் கொள்கிறார். ஒரு பேணுதலுக்காக அதிக அளவைக் கொண்ட மூன்று பர்ஸக் என்பதையே எடுத்துக் கொள்வோம். மூன்று பர்ஸக் என்றால் ஏறத்தாழ 25 கிலோ மீட்டரா கும். எனவே 25 கிலோ மீட்டர் தொலைவு ஒருவன் பயணம் செய்தால் அவன் தொழுகையை சுருக்கித்தொழுவதற்கும், இரு தொழுகைகளையும் ஒரே நேரத் தில் (சுருக்கி மற்றும்) சேர்த்து தொழுவதற்கும் சலுகையை பெறுகின்றான். அவ்வாறு சுருக்கி தொழும்போது லுஹர், அஸர், இஷா ஆகிய தொழுகை களை 4 ரக்அத்களுக்கு பதிலாக 2 ரக்அத்களாக சுருக்கி தொழ வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியபோது இரண்டு ரக்அத்க ளாகக் கடமையாக்கினான். பின்னர் சொந்த ஊரில் தொழும் (லுஹ்ர், அஸ்ர், இஷா ஆகிய) தொழுகைகளை (நான்கு ரக்அத்களாக) முழுமைப் படுத்தினான்; பயணத் தொழுகை முன்பு கடமையாக்கப்பட்டிருந்தவாறு (இரண்டு ரக்அத்தாகவே) நீடித்தது. நூல்: முஸ்லிம் 1220
சுன்னத் தொழுகையில் சலுகை
ஹஃப்ஸ் பின் ஆஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிப்பதற்காக (என் தந்தையின் சகோதரர்) இப்னு உமர் (ரலி) அவர் கள் வந்தார்கள். அவர்களிடம் நான் பயணத்தில் (முன் பின் சுன்னத் களான) கூடுதல் தொழுகைகள் தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்திருக் கிறேன். அவர்கள் (இந்தக்) கூடுதலான தொழுகைகள் தொழு வதை நான் பார்த்ததேயில்லை. நான் (பயணத்தில்) உபரியான தொழுகைக ளைத் தொழுபவனாயிருந்தால் (கடமையான தொழுகையையே) முழு மைப்படுத்தியிருப்பேன். உயர்ந்தோன் அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரி இருக்கிறது' (33:21) என்று கூறுகின்றான்'' என்றார்கள். முஸ்லிம் 1227
நோன்பில் சலுகை
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் (மதீனாவி லிருந்து மக்காவிற்குப்) பயணம் மேற்கொண்டார்கள். அப்போது அவர் கள் நோன்பு நோற்றிருந்தார்கள். உஸ்ஃபான்' எனும் இடத்தை அடைந் ததும் குடிநீருள்ள பாத்திரத்தைக் கொண்டுவரச் சொல்லி, மக்கள் காண்ப தற்காக பகல் நேரத்திலேயே அதை அருந்தி நோன்பை விட்டார்கள். இறுதியில் மக்காவிற்குள் நுழை(யும்வரை நோன்பு நோற்கமாலேயே இரு)ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணத்தில்) நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; நோன்பை விட்டும் இருக்கிறார்கள். எனவே, (நோன்பு நோற்க) விரும்புகின்றவர் நோன்பு நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகின்றவர் விட்டுவிடவும் செய்யலாம். முஸ்லிம் 2033
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறைகூறாதீர்; விட்டு விட்டவரையும் குறை கூறாதீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தில் நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; விட்டும் இருக்கிறார்கள். முஸ்லிம் 2044
(விடுபட்ட கடமையான நோன்பை பின்னர் நோற்று விட வேண்டும். இது பற்றி விரிவாக அறிய நோன்பு என்ற புத்தகத்தை பார்வையிடவும்.
காலுறைகளின் மீது மஸஹ் செய்வதில் சலுகை
ஷுரைஹ் பின் ஹானீ அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் காலுறைகள் மீது மஸ்ஹு செய்வது குறித்துக் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள், "நீங்கள் அலீ பின் அபீதாலிப் அவர்களை அணுகிக் கேளுங்கள். அவர் தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணம் செய்பவராய் இருந்தார்கள்'' என்று கூறினார்கள். எனவே, அலீ (ரலி) அவர்களிடம் (சென்று) அதைப் பற்றிக் கேட்டோம். அப்போது அவர்கள், "பயணத்திலி ருப்பவருக்கு மூன்று பகல் மூன்று இரவுகளையும், உள்ளூரில் இருப்பவருக்கு ஒரு பகல் ஓர் இரவையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்'' என்று கூறினார்கள். நூல்: முஸ்லிம் 465
குறிப்பு : பயணம் என்பது வாகனத்தில் சென்று கொண்டிருப்பதை மட்டும் தான் குறிக்கும் என்று தவறாக விளங்கி கொள்ளக் கூடாது. வெளியூர் பயணம் செய்தவர்கள் வெளியூரில் தங்கியிருக்கும் வரை பயணத்தில் இருப்பவர்களாகவே இஸ்லாத்தின் பார்வையில் கருதப்படுவார்கள். அவர்களுக்குரிய சலுகைகளை தங்கியிருக்கும் வரையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். (பார்க்க : புகாரி 4275, 4276)
கிப்லாவை முன்னோக்குவதில் சலுகை
பயணிகள் வாகனத்தில் இருந்த நிலையில் தொழுபவர்களாக இருந்தால் கிப்லாவை முன்னோக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இதுபோன்ற நிலையில் வாகனம் நின்ற பிறகு கிப்லாவை முன்னோக்கி தொழலாம் என்று தாமதிக்க தேவையில்லை. வாகனம் எந்த திசையை நோக்கி சென்றாலும் உட்கார்ந்த நிலையிலேயே தொழுது கொள்ளலாம். இது விஷயத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் இறைவன் ஒவ்வொருவரையும் அவ ரது சக்திக்கு மீறிய காரியத்தில் தண்டிப்பதில்லை. எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை. அல்குர்ஆன் 6:152
வீணாகும் நேரங்கள்
பயணம் மேற்கொள்ளும் போது நமக்கு அதிகளவில் ஓய்வு நேரங்கள் கிடைக்கின்றன. ஏனெனில் அந்நேரங்களில் நாம் எந்த ஒரு வேலையும் செய் வதில்லை. எனவே நமக்கு கிடைக்கும் அந்நேரங்களை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். பயனில்லாத சினிமா பத்திரிக்கை படிப்பது, செல்போனில் பாட்டு கேட்பது போன்ற வீணான காரியங்களில் ஈடுபட்டு நேரங்களை பாழ்ப்ப டுத்தி விடக்கூடாது. இறைவன் நமக்கு வழங்கியிருக்கும் அருட்கொடைகளில் ஓய்வு நேரங்களும் ஒன்று. நம்மால் முடியும்பட்சத்தில் நன்மையான காரியங் களில் அவைகளை செலவிட வேண்டும். ஏனெனில் அதைப்பற்றியும் நாம் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்கல் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்கன் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு. நூல் : புகாரி 6412
வாகனத்தில் ஏறியதும் ஓதும் துஆ
அலீ பின் அப்தில்லாஹ் அல்அஸ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் மக்களுக்கு (பின்வரும் பிரார்த்தனையை)க் கற்றுத் தந்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேனும் பயணம் புறப்பட் டால், தமது ஒட்டகத்தில் ஏறி அமர்ந்தவுடன் மூன்றுமுறை தக்பீர் (அல்லாஹு அக்பர்') கூறுவார்கள். பிறகு "சுப்ஹானல்லதீ சக்கர லனா ஹாதா, வ மா குன்னா லஹு முக்ரினீன, வ இன்னா இலா ரப்பினா ல முன்கலிபூன். அல்லாஹும்ம, இன்னா நஸ்அலுக ஃபீ சஃபரினா ஹாதல்பிர்ர வத்தக்வா, வ மினல் அமலீலி மா தர்ளா. அல்லாஹும்ம, ஹவ்வின் அலைனா சஃபரனா ஹாதா. வத்வி அன்னா புஅதஹ். அல்லா ஹும்ம அன்த்தஸ் ஸாஹிபு ஃபிஸ்ஸஃபரி, வல்ஃகலீஃபத்து ஃபில்அஹ்ல். அல்லாஹும்ம, இன்னீ அஊது பிக்க மின் வஃஸாயிஸ் ஸஃபரி, வ கஆபத்தில் மன்ழரி, வ சூயில் முன்கலபி ஃபில்மாலிலி வல்அஹ்ல்'' என்று கூறுவார்கள்.
(பொருள்: நாங்கள் இ(ந்த வாகனத்)தைக் கையாளும் திறன் பெற்றிராத நிலை யில், எங்களுக்கு இதைப் பணியவைத்த (இறை)வன் தூயவன். நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்லக்கூடியவர்களாய் உள்ளோம். இறைவா, இப்பய ணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ திருப்தியடையக்கூடிய (நற்)செயல் களையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா, இப்பயணத்தை எங்களுக்கு எளிதாக்குவாயாக! இப்பயணத்தின் தூரத்தைச் சுருக்குவாயாக! இறைவா, நீயே என் பயணத் தோழனாகவும் என் குடும்பத்தின் பிரதிநிதியாகவும் இருப்பாயாக! இறைவா, பயணத்தின் சிரமங்களிலிருந்தும், நிலைகுலையச் செய்யும் துயரக் காட்சி யிலிருந்தும், செல்வத்திலும் குடும்பத்திலும் நிகழ்ந்துவிடும் தீய மாற்றங்களி லிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
திரும்பி வரும்போதும் இவ்வாறே பிரார்த்திப்பார்கள். ஆனால், அவற் றுடன் பின்வரும் வரிகளையும் கூடுதலாக ஓதுவார்கள்: "ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன லி ரப்பினா ஹாமிதூன்'' (பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், எங்கள் இறைவனை வழிபட்டவர்களாகவும் அவ னையே போற்றிப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகிறோம்). (நூல் : முஸ்லிம் 2612)
வெளிநாட்டுப் பயணம்
இஸ்லாமியர்களில் பலர் பொருளாதார தேவைக்காக வெளிநாடு சென்று, அங்கேயே பல ஆண்டுகளாக தங்கி வேலை செய்பவர்களாக இருக்கின் றார்கள். இஸ்லாத்தின் பார்வையில் இதுபோன்ற பயணம் கூடுமா? என்பதை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இஸ்லாத்தில் பொருளாதாரத்தை அதிகள வில் திரட்டுவது தவறோ, பாவகாரியமோ அல்ல. ஆனால் அதை மட்டும் காரணம் காட்டி மற்ற கடமைகளை புறக்கணிப்பது, உதாசீனப்படுத்துவது மிகவும் தவறாகும்.
இஸ்லாத்தில் இறைவனுக்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை காரணம் காட்டி கூட நம் பெற்றோர்களுக்கு, மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை புறக்கணித்து விடமுடியாது. அவ்வாறு ஒருவர் செய்வாரானால் அவர் இறைவனிடத்தில் இறை நேசராக கருதப்படமாட்டார். மாறாக குற்ற வாளியாகவே கருதப்படுவார். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல் வேறு சமயங்களில் தெளிவு பட உணர்த்தியிருக்கின்றார்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலிலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப் படுகிறதே!'' என்று கேட்டார்கள். நான் "ஆம்! அல்லாஹ்வின் தூதரே!'' என்றேன். நபி (ஸல்) அவர்கள் "இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமா னதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்றபத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!'' என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! "அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ள வனாக இருக்கிறேன்!'' என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்!'' என்றார்கள். தாவூத் நபியின் நோன்பு எது?' என்று நான் கேட்டேன். "வருடத்தில் பாதி நாட்கள்!'' என்றார்கள்.
"அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலிலி) அவர்கள் வயோதி கம் அடைந்த பின் நபி (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்காமல் போய்விட்டேனே!' என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள்!'' என அபூசலமா அவர்கள் கூறுகிறார்கள்.
(நூல்: புகாரி 1975)
அபூஜுஹைஃபா (ரலிலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சல்மான் (ரலி), அபுத்தர்தா (ரலி) ஆகிய இரு வரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சல்மான் அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபுத்தர்தாவின் மனைவி) உம்முத் தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். உமக்கு என்ன நேர்ந் தது?' என்று அவரிடம் சல்மான் கேட்டார். அதற்கு உம்முத் தர்தா (ரலி) அவர்கள், உம் சகோதரர் அபுத்தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையு மில்லை' என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபுத்தர்தா வந்து சல்மானுக்காக உணவு தயாரித்தார். சல்மான் (ரலி) அவர்கள் அபுத்தர்தா விடம், உண்பீராக!' என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா, நான் நோன்பு நோற்றிருக்கிறேன்...' என்றார். சல்மான், "நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்'' என்று கூறி யதும் அபுத்தர்தாவும் உண்டார். இரவானதும் அபுத்தர்தா (ரலி) அவர்கள் நின்று வணங்கத் தயாரானார்கள். அப்போது சல்மான் (ரலி) அவர்கள், உறங்குவீராக!' என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங் கத் தயாரானார். மீண்டும் சல்மான், உறங்குவீராக!' என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரலி) அவர்கள், இப் போது எழுவீராக!' என்று கூறினார்கள். இருவரும் தொழுதனர். பிறகு அபுத்தர் தாவிடம் சல்மான் (ரலி) அவர்கள், "நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உம் குடும்பத்தாருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக!'' என்று கூறினார்கள். பிறகு அபுத்தர்தா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார் கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "சல்மான் உண்மையையே கூறி னார்!'' என்றார்கள்.
(நூல்: புகாரி 1968)
இந்த செய்திகளும் இதுபோன்ற பல செய்திகளும் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை காரணம் காட்டி, மனைவிக்கு செய்ய வேண்டிய தாம்பத்தியம் எனும் கடமையை புறக்கணிப்பதையோ, பெற்றோரை பராமரித் தல் எனும் கடமையை நிறைவேற்றத் தவறுவதையோ மிகவும் வன்மையாக கண்டிப்பதை காணலாம். இந்த அடிப்படையை தெளிவாக புரிந்துக்கொண்டு வெளிநாட்டில் பல ஆண்டுகளாக வேளை செய்பவர்களின் நிலையை காண் போம்.
இன்று வெளிநாடுகளில் தங்கி வேளை பார்ப்பவர்களில் பலர் திருமணம் முடித்தவர்களாக, பிள்ளைகளை பெற்றவர்களாக, வயதான பெற்றோரை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமை களை மிகவும் சாதாரணமாக புறக்கணிக்கின்றார்கள். தொழுகையை காரணம் காட்டியே மற்ற கடமைகளை புறக்கணிக்கக் கூடாது எனும்போது, பொருளா தாரத்தை காரணம் காட்டி இதர கடமைகளை புறக்கணிப்பது இறைவனிடத் திலும், இறைத் தூதரிடத்திலும் எவ்வளவு பாரதூரமான பாவகாரியம் என்பதை இதுபோன்ற சூழ்நிலையில் சிக்கித்தவிப்பவர்கள் சிந்திக்க வேண்டும். ஒரு பிள்ளைக்கு செய்ய வேண்டிய கடமையை முழுமையான முறையில் வெளிநாட்டில் இருந்து கொண்டு எப்படி நிறைவேற்றமுடியும்? வாரந்தோறும் போன் செய்து விசாரிப்பதின் மூலமோ, மாதாமாதம் பணம் அனுப்பி வைப்பதி னாலோ தங்களது கடமை நிறைவேறிவிட்டது என்று தப்புக் கணக்கு போட்டு விடக்கூடாது. இதையும் தாண்டி இங்கிருந்து கொண்டு நிறைவேற்ற முடியாத பல கடமைகள் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது என்பதை உணர வேண்டும்.
நமது பிள்ளைகளையும், பெற்றோரையும் வேண்டுமானால் மற்றவர்கள் பார்த்துக் கொள்ள முடியும் என்று வைத்துக் கொள்வோம். மனைவியின் தேவையை கணவரைத் தவிர வேறு யாரால் நிறைவேற்ற முடியும்? மணிக் கணக்கில் போனில் பேசி குடும்பம் நடத்தவா திருமணம் செய்தோம்.? குடும் பத்துடன் வெளிநாட்டில் இருப்பதற்கான எல்லா வசதிகளும் ஒருவருக்கு கிடைத்தால் அதை மார்க்க அடிப்படையில் குற்றம் கூற முடியாது. ஆனால் அந்த நிலை பெரும்பாலோனோருக்கு அமைவதில்லை. எனவே இதுபோன்ற தவறை செய்பவர்கள் இதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்ய வேண்டும். வாழ்நாளில் பெரும் பகுதிகளை வெளிநாட்டி லேயே கழிப்பவர்கள் முக்கியமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நன்றி: தீன்குலப்பெண்மனி