Tuesday, 7 December 2010

துபையில் நடைபெற்ற தவ்ஹீத் எழுச்சி மாநாடு



கடந்த 03.12.10 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலத்தின் சார்பாக தவ்ஹீத் எழுச்சி மாநாடு ஷேய்கா ஹின்த் பின்த் அல்மக்தூம் ஸ்போர்ட்ஸ் ஹாலில் நடைபெற்றது.

மஃரிப் தொழுகைக்குப் பின் தொடங்கிய இம்மாநாட்டில் கலந்து கொண்ட மக்களின் கூட்டம் துபாயில் தவ்ஹீதின் எழுச்சியை பறைசாற்றும் முகமாக இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்!

துபாய் மண்டலத் தலைவர் முஹம்மது நாஸிர் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் தலைமையில், மண்டல நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்ற இம்மாநாட்டில் சிறப்புப் பேச்சாளர்களாக யுஏயி மண்டல ஒருங்கிணைப்பாளர் சகோ.ஹாமீன் இபுறாஹீம் அவர்கள் ‘தடம்புரளாத தவ்ஹீத் ஜமாஅத் அன்றும் இன்றும்‘ என்ற தலைப்பில் தவ்ஹீத் கொள்கையில் தடம்புரளாமல் அன்றிலிருந்து இன்று வரை ‘தவ்ஹீத் ஜமாஅத்’ மட்டுமே நிற்கிறது என்பதை மக்களுக்கு எடுத்துக் கூறினார்கள்.

தாயகத்திலிருந்து இம்மாநாட்டிற்காக வருகை தந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் மௌலவி. ஷம்சுல் லுஹா ரஹ்மானி அவர்கள் ‘வஞ்சிக்கப்பட்டோரின் கோரிக்கைகள்’ என்ற தலைப்பில் இந்திய நாட்டில் இஸ்லாமிய சமுதாயம் நடத்தப்படுகின்ற முறையையும் அதில் ஒரு பகுதிதான் பாபர் மஸ்ஜித் இடிப்பு.அதை மீட்க வேண்டிய கடமை ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் உள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்தினார்கள்.

இம்மாநாட்டிற்கு அபுதாபி,அல்அய்ன்,அஜ்மான்,ராஸல் கைமா,ஃபுஜைரா,ஷார்ஜா, துபாய் ஆகிய மண்டலங்களிலிருந்து கொள்கைச் சகோதரர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

மண்டலச் செயலாளர் அபுதாஹிர் மற்றும் திருச்சி ஹுஸைன் அவர்கள் தலைமையில் தொண்டரணியினர் சிறப்பாக களப்பணி ஆற்றினார்கள்.
இறுதியில் மண்டலச் செயலாளர் அபுதாஹிர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள். பிறகு துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment