தொழுகையின் சிறப்பும் ! தப்லீக் தஃலீம் தொகுப்பும் !
உதாரணமாக ஒரு பாடசாலையில் கம்யூட்டர் கல்வியின் சிறப்பு அதன் முக்கியத்துவம் பற்றி மாத்திரம் போதிக்கப்படுகின்றது கம்யூட்டர்க் கல்வி போதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் இந்தக் கல்வியால் மாணவர்களுக்குக் கிடைக்கும் பயன் யாது ? பூச்சியம் தான் மிச்சம். இதுதான் இன்று தப்லீக்கிலும் நடந்து கொண்டிருக்கின்றது. நபி வழிப்படி தொழும் முறை பற்றி அதன் சட்டதிட்டங்கள் பற்றி, தொழுகையில் ஓத வேண்டியவை, வுழூ, தொழுகையின் பர்ழு ஷர்த்து, சுன்னத்துக்கள், தொழுகையை முறிப்பவைகள் பற்றியெல்லாம் ஏராளமான ஹதீஸ்களும் சட்டதிட்டங்களும் உள்ளன. இவை தஃலீம் தொகுப்பில் மருந்துக்கேனும் உண்டா ?. இல்லை தப்லீக் முக்கியஸ்த்தர்களுக்கேனும் தெரியுமா ?
அவர்களாவது 40 நாள் உடல் பொருள், தொழிலைத் தியாகம் செய்து தப்லீக்கில் வெளிக் கிளம்பும் அப்பாவிக்கார்க்கூன்களுக்கு
இது பற்றி அவர்களிடம் வினவினால் தயாராக ஒரு பதில் வைத்திருக்கின்றார்கள். ‘பழாயில்களைப் பற்றி தஃலீம் புத்தகத்தில் படிப்பது, மஸாயில்களை (சட்டங்களை) ஆலிம் உலமாக்களை அணுகி கால்மடித்து ஹதிய்யாக்களைக் கொடுத்துப் படித்துக் கொள்வது’ இதுதான் பதில். சரி 40 நாள் 4 மாதம் என்றெல்லாம் நீண்ட காலங்கள் தொழில் துறை, உத்தி யோகம் பொறுப்புக்களைத் துறந்து மக்கள் வெளிக்கிளம்பிச் செல்கின்றார்கள். இதிலாவது தொழுகை பற்றிய இன்னும் மார்க்க சம்பத்தப்பட்ட எந்தநிகழ்ச்சியாவது இடம்பெறுகின்றதா? அங்கும் அதே தஃலீம் அதே அமல்களின் சிறப்பு, சலித்துப் போனால் உசார் படுத்த ஹஜ்ஜின் சிறப்பு ஸதக்காவின் சிறப்பு எனும் பெயரில் இரு நாவல்கள். இதிலே துப்பறியும் கதைகளும், மெய்சிலிர்க்க வைக்கும் கதைகளும் தாராளமாக எவ்வித முகவரியுமில்லாது அவிழ்த்து விடப்படுகின்றன.
இந்தப் பொன்னான நேரத்தை மார்க்க தொழுகை விடயங்களைக் கற்பிப்பதில் செலவிடலாமே என்று சொல்லிப் பாருங்கள். அதற்கும் ஒரு ரெடிமேட் பதில் ‘ஆறு நம்பருக்கு அப்பால் பேசுவது உஸூலுக்கு மாற்றமானது. அதைப் பெரியார்கள் அனுமதிப்பதில்லை. கண்ட கண்ட மௌலவி மார்களிடமெல்லாம் மார்க்கம் கற்கக் கூடாது. பேணுதலான, இந்த ஹக்கான வேலையில் ஊறியவர்களிடத்திலேயே மார்க்கம் படிக்க வேண்டுமென்று’ தத்துவம் பேசுவார்கள். அவர்களிடமாவது கேட்டுப்படிக்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை.
இன்றைக்கு ஒவ்வொரு ஊர் கிராமங்களிலும் கூட 4மாதங்கள் ஒருவருடம் வக்து முடித்தவர்கள் கூட உண்டு. இவர்களிடம் எந்தளவு மார்க்க விடயங்களைத் தேடிப் படித்துள்ளீர்கள், தொழுகை துஆக்கள், அதன் சட்டங்கள், இன்னும் தொழுகை பற்றித் தெரிய வேண்டிய நூற்றுக் கணக்கான சட்டங்கள் உள்ளனவே!! இவற்றில் சிறிதளவாவது தெரியுமா? என்று விசாரித்துப் பாருங்கள். அப்படி ஒரு சிலருக்குத் தெரிந்திருந்தாலும் அது அவரது தனிப்பட்ட முயற்சியால் – ஏனைய இஸ்லாமிய நூல்களைப் படித்ததால் கற்ற விடயங்களாகத்தான் இருக்கும். இதை நீங்கள் ஏற்கத் தயங்கினால் நீங்களே பத்து தப்லீக் கார்க்கூன்களை அழைத்து அவர்களிடத்தில் சில தொழுகையின் சட்டங்களைக் கேட்டுப்பாருங்கள் எத்தனை பேர் சரியான பதில் சொல்கின்றார்கள் என்று பாருங்கள். ??
தப்லீக் பெரியார்கள் மார்க்க சட்டதிட்டங்களைப் பற்றி தமது தப்லீக் கார்க்கூன்களுக்கு கற்றுக் கொடுக்கத் தயங்குவதிலும் ஒரு உண்மை மறைந்திருக்கின்றது. அதாவது டில்லி பெரியார்கள் ஹதீஸின் அடிப்படையிலுள்ள சட்டங்களை ஏற்றுக் கொள்வதில்லை அவர்களது ஹனபி மத்ஹபு நூலிலுள்ள சட்டங்களே இஸ்லாம் என்றும் அதைத்தான் பின்பற்றுவது கடமையென்றும் கூறி நபிவழிச் சட்டங்களை மட்டுமன்றி, ஏனைய மத்ஹபுச் சட்டங்களையும் புறக்கணிப்பவர்கள். எனவே மார்க்க சட்டங்கள் கற்பிப்பதென்றால் ஹனபி மத்ஹபுப் படிதான் கற்பிக்க வேண்டுமென்பதில் இவர்களுக்கு வெறி ஆனால் ஏனைய மத்ஹபுகளைச் சார்ந்த கார்க்கூன்கள், தப்லீக் உலமாக்கள் இதனை ஜீரணிக்க மாட்டார்கள்.
ஆகவே இந்த மத்ஹபுச் சட்டப் பிரச்சினையால் தப்லீக்கின் இயக்க ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தடைப்படலாம் என்ற குறுகிய சுயநல எண்ணத்தாலேயே இவர்கள் ஆறு நம்பருக்கு அப்பால் போய் சட்டதிட்டங்கள் போதிக்கப்படுவதற்குத் தடை விதித்துள்ளார்கள். தமது இயக்கத்தை வளர்ப்பதற்காக இஸ்லாத்தின் ஆணிவேரான மார்க்க சட்டங்கள் மக்களுக்குப் போய்ச் சேராமல் தடை வேலி போட்டிருக்கிக்கும் இவர்கள்தான் நபியவர்களை நேசிப்பவர்களா? நபிவழிப்படி வாழ்பவர்களா? சிந்திப்பீர்களாக. .
ஹதீஸ் போதனையா. . கப்ஸா போதனையா ??
--------------------------
நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் எம்மனைவருக்கும் ஈருலக வழிகாட்டியாக வந்தவர்கள். எமக்குத் தேவையான எவ்விடயத்தையும் அவர்கள் சொல்லித்தராமல் விட்டதில்லை. எனவே ஒரு முஸ்லிம் எப்படித்தொழ வேண்டும் என அறிந்து கொள்ள விரும்பினால் ஹதீஸின் ஒளியில் எவ்வித சந்தேகங்களும் மீதியிருக்காத அளவுக்குத் தெட்டத் தெளிவாக அறிந்து கொள்ளும் அளவுக்கு தொழும் முறை, அதன் சிறப்பு, அதை முறிப்பவை, அதனை விட்டால் கிடைக்கும் தண்டணை இப்படி ஏராளமான நபி மொழிகள் இருக்கின்றன.
ஆனால் தப்லீக் தஃலீம் தொகுப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தொழுகை பற்றிய பகுதியின் ஆரம்பத்தில் மாத்திரம் சில அல்குர்ஆன் வசனங்களும் சில நபி மொழிகளும் இடம் பெறும் அதற்கு அடுத்த கட்டமாக ‘ஒரு ஹதீஸில் வருவதாவது…. ‘ ஒரு அறிவிப்பில் வருவதாவது… ‘ என்ற பெயரில் பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ்கள் இடம்பெறும்.
ஜக்கரிய்யா மௌலானாவோ ஹதீஸ்கலை மேதையாகிற்றே. . 20-25 வருடங்கள் புகாரி – முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூற்கள் நடத்தியவர்களாயிற்றே. . புகாரி முஸ்லிமில் தொழுகை பற்றி ஹதீஸ்களே இல்லையா? என்று உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.
உண்மைதான் அதில் வரும் ஹதீஸ்களையெல்லாம் சொன்னால் மக்கள் நபிவழிப்படி தொழ ஆரம்பித்து விடுவார்களே ஹனபி -ஷாபி மத்ஹபின் ஹதீஸூக்கு மாற்றமான சட்டங்களை அலட்சியம் செய்து விடுவார்களே. . அதன் பின்பு எல்லோரும் நபிகளுக்குத்தான் மதிப்பளிப்பார்கள். பெரியார்களுக்கு மதிப்பளிக்க மாட்டார்களே!. நபிவழியைப் படித்துக் கொடுத்தால் இவர்களது திஸ்த் திய்யாத்தரிக்காவிடம் பைஅத் செய்ய எவன் வரப்போகின்றான். ??
எனவேதான் தமது நோக்கம் நிறைவேற வேண்டுமென்பதற்காகவே ஆதாரப்பூர்வமான சட்ட சம் பந்தப்பட்ட ஹதீஸ்களைக் கூறுவதைத் திட்டமிட்டுத் தவிர்த்துள்ளார்கள். இவர்களது நோக்கம் பாரரர்களை ஹனபி ஷாபி மத்ஹபுக்குள்ளேயே வைத்துக் கொண்டு – அதை விட்டு வெளி யேற விடாது, இபாதத் எனும் போர்வையிலேயே ஹதீஸ் எனும் பெயரிலேயே பெரியார்களின் வீர தீர சாகசக் கதைகளைக் கூறி பெரியார்கள் மீது குறுட்டுப் பக்தியை உண்டு பண்ணி பின்னர் திஸ்த்திய்யாத் தரீக்காவுக்குள் உள் வாங்கிக் கொள்வதுதான் இவர்களது அந்தரங்க உள் நோக்கம். இதை நீங்கள் இப் போது ஒப்புக்கொள்ளா விட்டாலும் போகக் போக ஏற்றுக் கொள்வீர்கள். . என்னைப் போன்று. ..
__________________________
ஜசகல்லாஹ் சகோ: Ilmunnisha Nisha
No comments:
Post a Comment