Friday, 24 February 2012

ஆட்டுக் குட்டியில் அல்லாஹ்!


கிரானைட் கல்லில் கிறிஸ்து!






முகநூல் போன்ற சமூக வலைத் தளங்கள் வாயிலாகவும், மின்னஞ்சல்கள் வாயிலாகவும் நமது முஸ்லிம் சகோதரர்களால் அதிகமாகப் பரப்பப்படுவது இந்த வகை பொய்கள்.

...

... மேகத்திலோ, ஆட்டுக்குட்டியிலோ அல்லது மரம், காய்கறி, பழங்கள் போன்றவற்றிலோ அல்லாஹ் என்ற வார்த்தை இருப்பது போன்ற புகைப்படம் பதியப்படும். உடனே அதற்கு ஆயிரக்கணக்கான சகோதர, சகோதரிகள், சுப்ஹானல்லாஹ் என்று கமென்ட் கொடுப்பதும், லைக் அடிப்பதுமாக அந்த போட்டோ அமர்க்களப்படும்.



மின்னல் வேகத்தில் அந்த போட்டோ பல லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்து விடும். இதைப் பதிபவர்களோ, பரப்புபவர்களோ அல்லது இதை நம்பி பாராட்டுபவர்களோ இது உண்மையாக இருக்குமா என்று ஆராய்வதுமில்லை. சிந்திப்பதும் இல்லை.



அற்புதங்கள் மட்டுமே மார்க்கம் என்று மூளைச் சலவை செய்யபட்டுள்ள பரேலவிகள், கப்ரு வணங்கிகள் இதில் அதிகமான பங்கு வகிக்கின்றனர். இது தான் இஸ்லாத்தை நிரூபிக்கும் வழிமுறை என்று அவர்கள் நினைக்கின்றனர். இதே அடிப்படையில் ஏசுவின் உருவத்தை கிறித்தவர்களும் பிள்ளையார் உருவத்தை இந்துக்களும் பரப்புகிறார்களே, அதனால் அந்த மதங்கள் உண்மையாகி விடுமா? என்று இவர்கள் சிந்திப்பதில்லை.



எனவே இதுபோன்ற புகைப்படங்களை உங்களது நண்பர்கள் யாராவது பதிந்தால் அல்லது பகிர்ந்தால் அல்லது அதைப் பாராட்டி விமர்சனம் செய்தால் அவர்களுக்குப் பதில் சொல்லும் விதமாக இந்தக் கட்டுரையின் லிங்கைப் பதியுங்கள்.

No comments:

Post a Comment