30.10.2010 சனிக்கிழமை அன்று மேலப்பாளையம் பஜார் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலைப்பாளையம் கிளை சார்பாக பாபரி மஸ்ஜித் தீர்ப்புக்கு பின் முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஏ. செய்யது அலீ தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பேச்சாளர் கே.எஸ். அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி “தனித்து நிற்கும் தவ்ஹீத் ஜமாஅத்” என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சேவைகள், சமூகப் புரட்சிகள் ஆகியவற்றைப் பற்றி சிறப்புரையாற்றினார். மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி “அயோத்தியா தீர்ப்பு ஓர் அலசல்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment