Monday, 28 June 2010

TNTJ அத்தியடி தெரு வலைத்தளம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அஸ்ஸலாமு அலைக்கும்...
கடந்த 30 ஆண்டுகளாக மேலப்பாளையத்தில் ஏகத்துவ பிரசாரத்தில்...
அத்தியடி தெரு சகோதர்கள் சுமார் 20 ஆண்டுகளாக தங்களை முழுமையாக ஈடுபடுத்திவருகிறார்கள்...நமதூரின் ஆரம்பகால ஏகத்துவ பிரசாரத்தில் அடக்கு முறையில் அத்தியடி தெரு சகோதர்கள் பொய்வழக்கு புனையப்பட்டு சிறைசாலைகளில் அடைக்கப்பட்டனர்.தெருவின் ஊர் ஜாமத் கூட சில சகோதர்களை ஊர் நீக்கம் செய்தது.அப்படியல்லாம் அடக்கு முறைக்கு ஆளான....சகோதரர்களின் இன்றைய நிலை இறைவனின் கிருபையால் ...அத்தியடி தெருவில் மட்டுமல்ல ஊரில் கூட புறகணிக்க முடியாத ஓர் சக்தியாக உள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் தங்களை இணைத்துக்கொண்டு செயல்பாடுகளை சீரியமுறையில் அமைத்து செயல்பட்டு வருகிறது. கடல்கடந்து வாழும் நமதூரின்,நமது தெருவின் சகோதரர்களுக்கு நம் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு இந்த வலைத்தளம் பயன்படும் நோக்கத்தில் அமையும் என நம்புகிறோம்........

No comments:

Post a Comment